நீங்கள் என்னிடம் திரும்பி வர எதையும் செய்வேன்- மறைந்த கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் மகளின் உருக்கமான பதிவு

0
543
shane
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்ன் 1992 ஆம் ஆண்டு தான் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமானார். பின் இவர் 145 டெஸ்ட் போட்டிகளிலும் 194 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். பின் ஷேன் வார்ன் சர்வதேச கிரிக்கெட்டில் 1001 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதோடு மட்டுமின்றி ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை கைப்பற்றிய போதும் 20 ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலிய அணி சர்வதேச கிரிக்கெட்டில் ஆட்சி செய்கையிலும் அந்த அணியின் கிரிக்கெட்டில் வீரராக வலம் வந்தார். அதேபோன்று ஐபிஎல் வரலாற்றிலும் இவருக்கு என தனி இடம் உள்ளது. இப்படி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான ஷேன் வார்ன்க்கு உலகெங்கிலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

-விளம்பரம்-
shane

இந்த நிலையில் கடந்த வாரம் இவர் திடீரென அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி வெளியானதும் ரசிகர்கள் மீளாத் துயரில் ஆழ்ந்துள்ளனர். தற்போது அவருக்கு 52 வயதாகிறது. தாய்லாந்து நாட்டில் உள்ள தன்னுடைய பங்களாவில் வார்ன் இறந்தபடி கண்டெடுக்கப்பட்டுள்ளார். மேலும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கார்டியாக் அரெஸ்ட் அதாவது ஹார்ட் அட்டாக் மூலம் தான் உயிரிழந்திருக்கிறார் என்று உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில் வார்னின் மகள் சம்மர் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய மறைந்த தந்தை குறித்து மனம் உருகி பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.

- Advertisement -

ஷேன் வார்ன் மகள் சம்மர் பதிவு:

அதில் அவர் தன்னுடைய தந்தை மீண்டும் வர வேண்டும் என்ற உணர்ச்சி பூர்வமாக எழுதி இருக்கிறார். அதில் அவர், டாடி! எனக்கு வார்த்தைகள் வரவில்லை. நான் கனவு காண்பது போல் உணருகிறேன். என்னை எழுப்பி யூ ஆர் ஓகே என்று கூறும் அந்த இனிமையான குரலுக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். இது என்னுடைய உண்மையான வாழ்க்கை இல்லை. பூமியின் அழகான மனிதர்களுக்கு வாழ்க்கை தன் கோர முகத்தைக் காட்டும். உங்கள் மென்மையான குரல் மூலம் என்னிடம் நீங்கள் வந்து everything is going to be okay என்று சொல்வீர்கள். இனி நான் எப்படி எதிர்பார்க்க முடியும். அது சாத்தியமே இல்லை.

shane

ஷேன் வார்ன் பற்றி மகள் சம்மர் சொன்னது:

என்னை நினைத்து நீங்கள் பெருமை அடையும் வார்த்தைகளை இனி எங்கே கேட்பேன். குட் நைட், குட் மார்னிங், ஐ லவ் யூ என இனி யாரிடமிருந்து வரப்போகிறது. உலகம் உன்னை என்னிடமிருந்து பிரிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நாங்கள், 69 கோடைக்காலம் மற்றும் எனக்கு என் வாழ்க்கையின் நேரம் கிடைத்தது என்று பேசிக் கொண்டிருந்தோம். அந்த பாடலை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை பற்றி பேசினோம். உங்கள் புன்னகை அறை முழுவதையும் ஒளிரச் செய்தது. நாங்கள் நடனம் ஆடினோம். ஒருவருக்கு ஒருவர் சிரிப்பை நிறுத்த முடியவில்லை. கடவுளே என்னை சிரிக்க வைத்தாய் அப்பா. அப்பாவை நான் கடைசியாக பார்ப்பேன் என்று எனக்கு தெரியாது.

-விளம்பரம்-

உங்களுக்காக எதையும் செய்வேன்:

அந்த சிரிப்பை மீண்டும் கேட்க நான் எதையும் செய்வேன். உங்கள் குரலை கேட்க எதையும் செய்வேன். உங்கள் அழைப்புகளில் ஒன்றைப் பெற எதையும் செய்வேன். கடைசியாக ஒருமுறை உங்களுடன் இருக்க எதையும் செய்வேன். நீங்கள் சொர்க்கத்திற்கு செல்வதற்கு முன்பும் நீங்கள் கடைசியாக மூச்சு விடுவதற்கு முன்பு உங்கள் இறுதி தருணங்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். உங்கள் கையை பிடித்து நான் எவ்வளவு நேசிக்கிறேன், உன்னை பார்க்கிறேன் என்று சொல்ல விரும்புகிறேன். நான் உங்கள் நேரத்தை உங்களுக்காக எதையும் செய்வேன்:எடுத்துக் கொண்டேன். மேலும், இந்த பூமியில் உங்களுடன் அதிக நேரம் இருக்க நான் எதையும் செய்வேன்.

வைரலாகும் ஷேன் வார்ன் மகள் சம்மர் பதிவு:

எங்கள் காலம் உங்களிடமிருந்து பிடுங்கப்பட்டது. நீங்கள் என்னிடம் திரும்பி வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் உயிருடன் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நீங்கள் எப்போதும் என் இதயத்தில் வாழ்வீர்கள். இந்த பூமியில் என் காலம் முடியும் வரை நான் மீண்டும் உங்களுடன் இணையும் வரை அந்த நினைவுகளை நேசிப்பேன். நான் உன்னை நேசிக்கிறேன். அப்பா, நீங்கள் எங்கிருந்தாலும் எப்போதும் என் தந்தையாகவே இருப்பீர்கள். உங்கள் சிறுமி எஸ்.ஜே.யை நேசியுங்கள். நான் உங்களை பெருமைப்படுத்துவேன் என்று ஷேன் வார்ன் மகள் சம்மர் பதிவிட்டிருக்கிறார். தற்போது இவரின் பதிவு சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement