போன இரண்டாம் நாளே சக போட்டியாளர்களை கடுப்பேற்றிய பார்வதி – கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.

0
1278
parvathy
- Advertisement -

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோக்களில் சர்வைவர் நிகழ்ச்சியும் ஒன்று. வெவ்வேறு குணாதிசியங்கள் நிறைந்த மனிதர்களை சவால்கள் நிறைந்த ஓரிடத்தில் ஒன்று சேர்த்த பிறகு அவர்கள் கொடுக்கும் சவால்களை கடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சி தான் சர்வைவர். இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் அர்ஜுன் தான் தொகுப்பாளராக உள்ளார். சவால்கள் நிறைந்த தனித்தீவில் 18 போட்டியாளர்களை களம் இறக்கி விடுவார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் யூடியூப் பிரபலம் பார்வதி செய்த செயலால் ரசிகர்கள் பல விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி தொடங்கி தற்போது இரண்டாவது நாள் கடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது நாள் அன்று போட்டியாளர்களுக்குள் குழாயடி சண்டை அளவிற்கு சர்ச்சைகள் பயங்கரமாக கிளம்பி உள்ளது. மேலும், 18 பேர்களை இரண்டு அணியாக பிரித்து அவர்களுக்கு முதல் சவாலை கொடுத்துள்ளார்கள்.

இதையும் பாருங்க : ஒரு பெண்ணாக இருந்து இப்படி செய்யலாமா – சர்ச்சைக்குள்ளாகும் நிவேதா தாமஸின் மாட்டுப் பண்ணை வீடியோ.

- Advertisement -

அதில் ஒன்று வசதி உள்ள தீவு, இன்னொன்று நெருப்பு உருவாகும் கருவி. அதில் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுக்கலாம். கடுமையான போட்டிக்கு பிறகு வேடரின் அணி நெருப்பில்லாத வசதியான தீவை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

காடார் அணி நெருப்பு கருவி தேர்ந்தெடுத்தார்கள். இதை வைத்து எப்படி பொழுதை கழிப்பது என்று இரு அணியுமே காத்து கொண்டு இருந்தார்கள். இந்த நிலையில் பார்வதியின் ஆட்டம் தொடங்கியது. மரம் வெட்ட சென்ற இடத்தில் அம்ஜத்துக்கும், பார்வதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு புகையத் தொடங்கியது.

-விளம்பரம்-

பின் ஸ்ருஷ்டி டாங்கேவை பார்த்து கேமரா வரும்போது மட்டும் நீங்க வேலை செய்றீங்களா? என்று பார்வதி கேட்க ஸ்ருஷ்டிக்கும் கோபம் ஏற்பட்டு தனியாக புகைந்து கொண்டிருந்தார். அதே போல நான் கீழே விழும்போது சிரிப்பீங்களா என்று ஸ்ருஷ்டி டாங்கேவிடம் பஞ்சாயத்தை கூட்டினார். இந்த நிலையில் அணிக்கு தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டி வைத்தது சர்வைவர்.

https://twitter.com/SsvRemo/status/1437650486778204163

உடனே அணியில் சில பேர்களை மட்டும் சொல்லிக்கொண்டு இருந்த நிலையில் பார்வதி இந்த சமயத்தில் தைரியசாலியாக மட்டும் இருந்தால் போதாது தலைவராக இருக்க ஒரு அணியை ஒருங்கிணைத்து செய்ய வேண்டும் என்று ஆட்டோ பாம் வெடியை போட்டார். பின் பார்வதி நான் இங்க வந்து பல விஷயங்களை தானாக முன்வந்து செய்தேன். ஆனால், என்னுடைய உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நந்தா இடம் கம்ப்ளைன்ட் செய்து கொண்டிருந்தார்.

அடுத்த எபிசோடில் தான் தலைவர் யார் என்று தெரியும் . இப்படி இரண்டாவது நாள் காட்சியை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சோசியல் மீடியாவில் பார்வதி குறித்து கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். முதல் முதலில் பார்வதி தான் வெளியே போவார்கள் என்றும் , இந்த சர்வைவர் டீமில் பார்வதி தான் அடுத்த வனிதா என்றும் ரசிகர்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement