முதன் முறையாக ஷங்கர் படத்தில் நடிக்கபோகும் நடிகர்.! செம மாஸ் கூட்டணி.!

0
1256
- Advertisement -

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 2.0 திரைப்படம் உலகளவில் வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-
shankar

கமலின் கடைசி படமான இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தை அடுத்து இயக்குனர் ஷங்கர் யாரை வைத்து இயக்க போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதையும் படியுங்க : இந்தியன் 2 படத்தின் கதையை பற்றி ஸ்வாரஸ்ய தகவலை சொன்ன இயக்குனர் சங்கர்..! 

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த படத்தை இந்தி நடிகர் ரித்திக் ரோஷனை வைத்து எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷங்கர் சொன்ன கதை ரித்திக்கிற்கு மிகவும் பிடித்துள்ளதாம். இருப்பினும் ஒப்பந்தம் எதிலும் ரித்திக்கிடம் ஷங்கர் இன்னும் கையெழுத்து வாங்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் 2.0 படத்தில் அக்ஷய் குமார் கதாபத்திரத்தில் ரித்திக் ரோஷனை தான் நடிக்க வைப்பதாக இருந்தது. ஆனால், ரித்திக் ரொஷானுக்கு கால் ஷீட் பிரச்னையால் 2.0 படத்தில் நடிக்க முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement