கேப்டன் பிரபாகரன் படத்தின் ரீ ரீலீஸ் குறித்து சண்முக பாண்டியன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே பிரபல நடிகர்களின் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதில் சில முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் செய்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது விஜயகாந்தின் நூறாவது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் படத்தை ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

கடந்த 1991 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் வெளியான படம் தான் கேப்டன் பிரபாகரன். இந்த படத்தில் விஜயகாந்த், ரூபிணி, லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான், சரத்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசை அமைத்திருந்தார். இந்த படம் திரையரங்கில் 300 நாட்களுக்கும் மேல் ஓடி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது பல வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்கள்.
கேப்டன் பிரபாகரன் ரீ ரிலீஸ்:
மேலும், இந்த படம் 34 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பது ஒட்டி பிலிம்பில் எடுக்கப்பட்ட இந்த படத்தை டிஜிட்டல் தரத்திற்கு உயர்த்தப்பட்டு மீண்டும் இன்று தமிழ்நாடு முழுவதும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. புதிய படத்தைப் போலவே ரசிகர்கள் ஆரவாரத்துடன் கேப்டன் பிரபாகரன் படத்தின் முதல் காட்சியை கொண்டாடி தீர்த்திருக்கிறார்கள். அதோடு நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த்தை திரையில் பார்ப்பதால் ரசிகர்கள் ரொம்ப எமோஷனல் ஆகி இருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=e7ZtdmOqmRE
சண்முக பாண்டியன் பேட்டி:
மேலும், இந்த படத்தின் ரீ ரிலீசுக்காக சென்னை கமலா திரையரங்கிற்கு இயக்குனர் செல்வமணி, மன்சூர் அலிகான், விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் எல்லோருமே படத்தை பார்த்து கண்டு மகிழ்ந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் படம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்தின் மகனும் நடிகருமான சண்முக பாண்டியன், கேப்டன் பிரபாகரன் படம் வெளியாகும் போது நான் பிறக்கவே இல்லை.
அப்போது அண்ணா தான் பிறந்திருந்தார்.
https://www.youtube.com/watch?v=wqBXnujVLX8
விஜயகாந்த் பற்றி சொன்னது:
நான் இந்த படத்தை திரையரங்களில் பார்த்திருக்கிறேன். அப்பாவை செல்வமணி சார் ரொம்பவே அழகாக காண்பித்திருக்கிறார். 90 கிட்ஸ், 2k கிட்ஸ்மே இந்த படத்தை கொண்டாடுகிறார்கள். இந்த படத்தை 90களில் எடுக்கப்பட்டது என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். இப்போதும் இந்த படம் எனக்கு போர் அடிக்கும் மாதிரியான உணர்வை கொடுக்கவில்லை. இந்த மாதிரியான படத்தை இயக்குனர்கள் இப்போது அதிகமாக எடுக்க வேண்டும். நீண்ட வருடங்களுக்கு பிறகு அப்பாவை திரையில் பார்க்கும்போது என்னுடைய கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது. என்னால் அதை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

விஜய் மாநாடு பற்றி சொன்னது:
இதேபோல அப்பாவினுடைய படங்களை திரையில் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. செல்வமணி சார் கேப்டன் பிரபாகரன் 2 எடுப்பதாக சொல்லி இருக்கிறார். நானும் அதற்கு ரெடியாகத்தான் இருக்கிறேன். மேலும், நேற்று மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் விஜய் அவர்கள் என்னுடைய அப்பா விஜயகாந்தை பற்றி பேசி இருந்தார். விஜய் சாருக்கு என்னுடைய அப்பா அண்ணனை போன்றவர். அதனால்தான் அவர் அண்ணா என்று குறிப்பிட்டு இருந்தார். அவ்வளவுதான். அப்பாவும் விஜய் சாரும் சிறுவயதில் இருந்தே பார்த்திருக்கிறார். அப்பா மக்கள் சொத்து. இப்போது அப்பாவை கொண்டாட வந்திருக்கிறோம் என்று கூறுகிறார்.






