டைப் ‘பி’ கொரானாவால் பாதிப்பட்டவர்கள் அதிகமாவார்கள். டாக்டரின் வீடீயோவை பகிர்ந்த சாந்தனு.

0
6105
shanthanu

இந்தியாவில் 500 பேருக்கு மேல் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதன் பரவல் அதிகமாகி வருகிறது. தமிழகத்தில் இதுவரை 26 பேர் இந்த கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

உலக நாடுகள் அனைத்தும் இந்த கரோனா வைரஸை எதிர்த்து போராடி வருகின்றனர். இதனால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிக காய்ச்சல், அதிக இருமல், மூச்சுத்திணறல் இவையெல்லாம் தான் கொரோனா வைரஸின் அறிகுறிகள்.

- Advertisement -

இதையும் பாருங்க : கொரோனவினால் சென்னை வர முடியாமல் இருக்கிறாரா தல? இப்போ எங்க இருக்காரு?

மேலும், கொரோனா வைரஸ் குறித்து பல விழிப்புணர்வு வீடியோக்களை பிரபலங்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகர் சாந்தனு அவர்கள் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

-விளம்பரம்-

அதில் கொரோனா வைரஸ் குறித்து கூறியிருப்பது, இந்த கொரோனா வைரஸ் பரவல் நான்கு வகை மக்கள் மூலம் பரவுகிறது. முதல் வெளிநாடுகளிலிருந்து வரும் மக்களை முதலில் சோதனை செய்யப்படும். அப்படி அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால் 14 நாட்களுக்கு பிறகு தெரிந்து விடும். வெளிநாடுகளிலிருந்து வரும் மக்கள் அனைவரும் முதலில் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். இல்லை என்றால் பல நபர்களுக்கு பரவும். அப்படி ஒரு நபர் வெளிநாட்டில் இருந்து வந்தால் அவர் மீது முதலில் சோதனை செய்யப்படும்.

பின்பு அவரிடம் 14 நாட்கள் வரை வெளியில் செல்லக்கூடாது என்று அறிவுரை கூறப்படும். ஆனால், அவர் அதை மீறி ஏர்போர்ட்டில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் பல பேர்களை சந்தித்து செல்கிறார். அப்படி அவர் சந்திக்கும் நபர்கள் எல்லோரும் இரண்டாம் வகையை சேர்ந்தவர்கள். பின் அந்த நபர் தன் குடும்பம் மற்றும் உறவினரை சந்திக்கிறார். அவர்கள் எல்லாம் மூன்றாம் வகையை சேர்ந்தவர்கள். பிறகு 14 நாட்கள் கழித்து அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் அவரை தனிமை படுத்தப்படும்.பின் மூன்றாம் வகை மக்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படும்.

ஆனால், இதில் இரண்டாம் வகை மக்கள் தான் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை அறியாமல் இருப்பார்கள். இவர்கள்(இரண்டாம் வகை) தங்கள் குடும்பம்,உறவினர்,நண்பர் என்று பழகும் போது அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படுகிறது. இவர்கள் தான் நான்காம் வகையை செத்தவர்கள். இப்படி ஒருவரிடம் இருந்து ஒருவராக இந்த கொரோனா தொற்று பரவி கொண்டேசெல்லும். அதனால் தான் அரசாங்கம் 14 நாட்களுக்கு வெளியில் வரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. அதோடு பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக தனிமைப் படுத்த வேண்டும் என்று கூறினார்.

Advertisement