8 வருடம் லவ் பிரேக் அப், விஜய் அண்ணாவிடம் என்னை பொறுக்கின்னு சொல்லிட்டா. காதல் ஸ்டோரி பகிர்ந்த சாந்தனு கீர்த்தி.

0
81674
shanthanu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் சாந்தனும் ஒருவர். தமிழ் சினிமா உலகில் இயக்குனர், நடிகரான பாக்யராஜ் மற்றும் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இவர்களின் மகன் தான் சாந்தனு என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1998 ஆம் ஆண்டு பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த “வேட்டிய மடிச்சு கட்டு” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானவர். பின் சில ஆண்டுகள் கழித்து 2008 ஆம் ஆண்டு சக்கரகட்டி என்ற திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஆயிரம்விளக்கு, கண்டேன், அம்மாவின் கைப்பேசி, சித்து பிளஸ் 2, கதை திரைக்கதை வசனம் இயக்கம், வாய்மை, முப்பரிமாணம், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். இருந்தாலும் சாந்தனு அவர்களுக்கு சினிமாவில் பெரிய அளவு வாய்ப்பு கிடைக்கவில்லை.

-விளம்பரம்-
Image result for vijay at shanthanu wedding

- Advertisement -

சமீப காலமாகவே இவர் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சாந்தனு அவர்கள் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது தளபதி விஜய் அவர்கள் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் சாந்தனு நடித்து வருகிறார். இந்த படத்தில் சாந்தனு அவர்கள் கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி வருகிறார். மேலும், சாந்தனு அவர்கள் 2015 ஆம் ஆண்டு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி கீர்த்தி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கீர்த்தி மிகப் பிரபலமான தொகுப்பாளினி என்பது நம் அனைவருக்குமே தெரியும். இவரை அனைவரும் கீகீ என்று தான் செல்லமாக அழைப்பார்கள். இந்நிலையில் காதலர் தினத்திற்காக நடிகர் சாந்தனு அவர்கள் தன்னுடைய மனைவியுடன் பேட்டி அளித்திருந்தார்.

இதையும் பாருங்க : காதலர் தினத்தன்று உருக்கமான பதிவை பதிவிட்ட ரோபோ சங்கரின் மகள்.

-விளம்பரம்-

அதில் சாந்தனு அவர்கள் தன்னுடைய காதல் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது, கல்யாணத்துக்கு முன்னாடி பல லவ் செய்து உள்ளோம். அதாவது நான் ஸ்கூல் லவ், காலேஜ் லவ். அப்புறம் ரெண்டு வருஷம் பிரேக்கப் பண்ணிக்கிட்டோம். அதுக்கப்புறம் லவ் பண்ணோம். அதுக்கப்புறம் ஒரு சின்ன பிரச்சனையில ஒரு எட்டு வருஷம் தொடர்ந்து பேசாமல் இருந்தோம். அதுக்கு பின்னாடிதான் பிராப்ளம் எல்லாம் முடிஞ்சி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஒருமுறை கீகீ, விஜய் அண்ணா கிட்ட போயி என்ன பொறுக்கின்னு சொல்லிட்டா. நிறைய பொய் சொல்றேன்னு உடனே பொறுக்கின்னு சொல்லிட்டா. விஜய் அண்ணாவுக்கு பக்குன்னு ஆயிடுச்சு. என்னடா இப்படி எல்லாம் சொல்றாங்கனு என்னை பார்த்தாரு. அத என்னால மறக்க முடியாது நிகழ்வு.

எனக்காக நிறைய விஷயங்களை கீகீ மாத்திட்டாங்க. முன்னாடி இருந்தத விட இப்ப நிறைய விஷயங்கள் எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும் பண்றாங்க சொல்லிட்டு இருக்கும் போதே கீகீ பேச ஆரம்பித்தாங்க,
நான் மட்டும் இல்லங்க அவனும் எனக்காக நிறைய வேலை செய்ய ஆரம்பித்தார். இப்படி தொடர்ந்து பல விஷயங்களை பாகிர்ந்து கொண்டார்கள். இவர்கள் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவர்கள் அழகான குயூட் ஜோடி என்று கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement