நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட பாக்கியராஜ், சாந்தனு போட்ட காட்டமான பதிவு – என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
534
- Advertisement -

நடிகர் சங்கத்திலிருந்து பாக்கியராஜை நீக்கியதற்கு கோபத்தில் சாந்தனு பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் உள்ள நடிகர்களுக்கு என்று ஒரு தனி சங்கம் இருக்கிறது. நடிகர் சங்கத்திற்கு என பல ஆண்டு காலமாகவே கட்டிடம் கட்டும் திட்டம் இருந்து கொண்டிருக்கின்றது. இதனை எதிர்த்து நடிகர் சங்க கட்டிடம் கட்ட வேண்டும் என்று நடிகர் விஷால் பாண்டவர் அணி உருவாக்கினார். 2015 ஆம் ஆண்டு நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் ராதாரவிக்கு எதிராக விஷால் களமிறங்கினார்.

-விளம்பரம்-

இறுதியில் விஷால் அணி அனைத்து பதவிகளையும் பெற்று நாசர் தலைமையில் விஷால் செயலராக பதவி ஏற்றார். இந்த பதவிக்காலம் முடிவடைந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தல் 2019 ஆம் ஆண்டு தாமதமாக அறிவிக்கப்பட்டது. விஷாலுக்கு எதிராக அணியை உருவாக்கி இருந்தார் ஐசரி கணேஷ். இவருக்கு ஆதரவாக பாக்யராஜ் இருந்தார். ஐசரி கணேஷ் ஆதரவில் பாக்யராஜ் அணி போட்டியிட்டது. பின்னர் இரு அணிகளுக்குள் கடும் போட்டி ஏற்பட்டது. தேர்தல் நடைபெற்று முடிந்தது. இருந்தாலும் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட உரிமையாளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இதனால் பல்வேறு பிரச்சனைகள் எழுந்ததால் வாக்குகள் எண்ணப்படவில்லை.

- Advertisement -

இதையும் பாருங்க : கல்லூரி விழாவில் சீரியஸாக பேசிக்கொண்டு இருக்கும் போது தல என்றதும் 2k கிட்ஸ் செய்த செயலால் கடுப்பான விஜய் சேதுபதி

விஷால் அணி வெற்றி:

இதனை அடுத்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தேர்தல் விசாரித்தது வாக்குகளை எண்ண உத்தரவிட்டது. மீண்டும் நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் தலைமையில் போட்டியிட்ட விஷால், கார்த்தி, கருணாஸ் ஆகியோர் மீண்டும் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் சார்பாக பாக்யராஜுக்கு ஷோகேஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் குறித்து பொய்யான, உண்மைக்கு புறம்பான கருத்துக்களை நடிகர் சங்கத்துடைய உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் பரப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

பாக்யராஜுக்கு அனுப்பிய ஷோகேஸ் நோட்டீஸ்:

காழ்ப்புணர்ச்சி காரணமாக சில உறுப்பினர்களின் தூண்டுதல் பெயரில் நடிகர் சங்கத்தின் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் மீது சமூக அந்தஸ்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த செயலை செய்து இருக்கிறீர்கள். சட்ட விதிகளுக்கு எதிராக இதை செய்திருக்கிறீர்கள். சங்க உறுப்பினர்கள் சிலர் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பி இருந்தது. இது குறித்து செயல் குழுவில் முடிவு எடுத்து சங்க உறுப்பினர் பதவியில் இருந்து உங்களை ஏன் நீக்க கூடாது? என விளக்கம் பெற முடிவு செய்யப்பட்டது.

நோட்டீஸில் கூறி இருப்பது:

அதோடு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்படுகிறது. 15 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என கடிதம் அனுப்பி இருந்தார்கள். அதேபோல் நடிகர் சங்கத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் ஏ எல் உதயாவிற்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க விதி 13 படி சங்கத்திற்கு எதிராக உறுப்பினர்கள் யாரும் செய்திகளை செய்தி வாயிலாகவோ அல்லது உறுப்பினர்கள் கடிதம் வாயிலாகவும் கருத்து சொல்லக்கூடாது என்று விதி இருப்பதால் நடிகர் சங்கத்திலிருந்து பாக்கியராஜ் மற்றும் உதயா உள்ளிட்ட இருவரையும் ஆறு மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

சாந்தனு டீவ்ட்:

தற்போது இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து சாந்தனு அவர்கள் கோப கொந்தளிப்பில் டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், எவ்வளவு கீழே இறங்க முடியுமோ அவ்வளவு இறங்கி பார்க்கிறீங்க. திருத்த முடியாது என்று பதிவிட்டிருக்கிறார். இதை கண்ட பலர் ப்ளூ சட்டை பொன்னியின் செல்வன் விமர்சனத்தை குறிப்பிடுகிறார் என்று கமன்ட் செய்தனர். ஆனால், சாந்தனு என்னுடைய இந்த ட்வீட் எந்த ஒரு படத்திற்கோ ரசிகர் சண்டை பற்றியோ இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் சாந்தனுவின் இந்த ட்வீட் நடிகர் சங்கத்தை சார்ந்த நாசர், கார்த்தி, விஷாலை குறிப்பிட்டு தான் என்று பலர் கமன்ட் செய்து வருகின்றனர்.

Advertisement