கல்லூரி விழாவில் சீரியஸாக பேசிக்கொண்டு இருக்கும் போது தல என்றதும் 2k கிட்ஸ் செய்த செயலால் கடுப்பான விஜய் சேதுபதி

0
674
vjs
- Advertisement -

கல்லூரி மாணவர்கள் மத்தியில் கருத்தாக பேசிக் கொண்டிருக்கும் போது தல என்று சொன்னதும் மாணவர்கள் கட்டியதால் விஜய் சேதுபதி கடுப்பாகி இருக்கிறார். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடும் உழைப்பினால் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஜய் சேதுபதி. சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சின் மூலம் சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர். இவர் என்றென்றும் மக்களின் செல்வனாக திகழ்ந்து வருகிறார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பல உதவிகளை செய்து வருகிறார்.

-விளம்பரம்-

சினிமாவை தாண்டி விஜய் சேதுபதி தன்னுடைய கவர்ச்சியான மற்றும் மோட்டிவேஷன் பேச்சுக்களுக்கு பெயர் போனவர் ரஜினி விஜய் தொடர்ந்து விஜய் சேதுபதியின் மேடைப்பேச்சுகள் ரசிகர்கள் மனதில் அடிக்கடி இடம் பிடித்து விடும் இப்படி இருக்க சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்று இருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : மதன் கௌரி யூடுடுயூப் சேனலுக்கு நித்யானந்தா வைத்த செக் – வருத்தத்தில் மதன் கௌரி வெளியிட்ட வீடியோ.

மாணவர்கள் மத்தியில் பேச்சு :

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் ‘இந்த உலகில் யாரும் யாரிடமும் தோற்றுப்போவதில்லை. யாரும் யாரையும் வெற்றி கொள்வதும் இல்லை. அது அந்த சமயத்தில் நடக்கும் ஒரு சிறிய நாடகம் மட்டுமே. அறிவை மேம்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானது கேட்பது. பிறர் பேசுவதை முதலில் அதை நன்றாக கவனித்து கேளுங்கள். பள்ளி, கல்லூரி எல்லாம் அதை தான் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றன. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பாடங்கள் எல்லாம் யாரோ ஒருவர் படித்து, புரிந்து கொண்டு அதை மற்றவர்களுக்கு பாடமாக ஆக்கியது தான்.

-விளம்பரம்-

அதற்கு பெயர் தான் பகுத்தறிவு :

அவ்வாறு நாம் படிக்கும் பாடங்களை நம் அறிவைக் கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும். அதற்கு பெயர் தான் பகுத்தறிவு. அது கடவுளாக இருந்தாலும், சக மனிதனாக இருந்தாலும் அல்லது யாராக இருந்தாலும் சரி, கருத்தைப் பாருங்கள், கருத்து சொன்னவரை பார்க்காதீர்கள். கருத்து உங்களுக்கு பயன்படுகிறதா என்பதை மட்டும் பாருங்கள். புரிந்து கொள்ளும் திறன் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

தல என்று சொன்னதும் கத்திய மாணவர்கள் :

கண்ணதாசன் சொன்னது போல் ‘தன்னைத் தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா’ என்ற பாடலின்படி, தன்னை உணர்ந்து கொள்வது தான் மிக முக்கியம். நாம் தான் சிறந்த புத்தகம் என்று பேசி இருந்தார். மேலும், பேசிக் கொண்டிருக்கும்போது ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை’ என்ற திருக்குறளை உதாரணமாக சொன்ன விஜய் சேதுபதி, அதை ஏன் தலை என்று சொன்னார்கள் தெரியுமா என்று சொன்னதும் கூட்டத்தில் இருந்த மாணவர்கள் அனைவரும் கூச்சல் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

போங்கப்பா ஏய் :

இதனால் கடுப்பான விஜய் சேதுபதி ‘தயவு செய்து கத்தாதீங்கப்பா, என்ன பேசிட்டு இருக்கேன் நீங்க என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், போங்கப்பா ஏய்’ என்று ஒரு நொடி சலிப்பாகி பின்னர் பேச தொடர்ந்தார். விஜய் சேதுபதியின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வரலாறு விஜய் சேதுபதி நல்ல கருத்துக்களை பேசிக்கொண்டிருப்பதை கவனிக்காமல் தல என்று சொன்னதும் கத்திய 2k கிட்ஸ்களின் முதிர்ச்சியை கண்டு மெய் சிலிர்த்து போய்விட்டனர்

Advertisement