செய்யற தொழில சுத்தம் இருந்தா மனசு இப்படி மலிவா யோசிக்காது – கேலி செய்த நபர். சாந்தனு கொடுத்த பதிலடி.

0
1628
shanthanu
- Advertisement -

பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் பல வாரிசு நடிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் சாந்தனுவும் ஒருவர். இவரது தந்தை பாக்கியராஜால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்ட இவர் தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். என்னதான் அழகும் திறமையும் இருந்தாலும் இவரால் ஒரு உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க முடியவில்லை. இவர் நடித்த பல படங்கள் தோல்வியை தான் சந்தித்தது. இறுதியாக இவர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் மாளவிகா, ஆண்ட்ரியா, ரம்யா, கௌரி கிஷன், சாந்தனு என்று பலர் நடித்திருந்தாலும் இவர்களுக்கு எல்லாம் படத்தில் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் பல மீம்களை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்தில் நடித்த ஷாந்தனுவின் கதாபாத்திரமும் கேலிக்கு உள்ளானது. படத்தில் வந்த பூனை கூட அதிக காட்சியில் வந்தது என்றெல்லாம் கேலி செய்துவந்தனர்.

இதையும் பாருங்க : நாங்கள் மூவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம் – சீரியல் நிறைவடைந்த பின் ஸ்வேதா உருக்கம்.

- Advertisement -

ஆனால், இதற்கு பதிலடி கொடுத்த சாந்தனு ஒரு சீனோ, ஒரு முழு படமோ. இப்படிபட்ட ஒரு மிகப்பெரிய படத்தில் நான் இருக்கிறேன் என்பதே எனக்கு சாதனை தான். அதை நினைத்து நான் பெருமையடைகிறேன். இந்த படம் மூலமாக நல்ல நண்பர்களை பெற்றுள்ளேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் சாந்தனு மீண்டும் ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் சாந்தனு, ட்விட்டரில் ஹரிஷ் கல்யானை tag செய்து, உங்ககிட்ட இருந்து இதை எதிர்பார்கள, ஏன் என்னை ஏமாத்துனீங்க பதில் சொல்லுங்க’ என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு சாந்தனுவின் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் ப்ரோமோஷன் வேலைக்காக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த பதிவை கண்ட ரசிகர் ஒருவர், ஒழுங்கா படம் நடிச்சா இது எல்லாம் தேவைப்படாது என்று கேலி செய்தார்.

-விளம்பரம்-

இதற்கு சாந்தனு, மூளை வளர்ச்சி நல்லா இருந்தா இன்னொருத்தனை குறைசொல்ல தோணாது என்று பதில் அளித்தார். அதற்கு அந்த நபர், செய்யற தொழில சுத்தமும் பக்தியும் இருந்தா மனசு இப்படி மலிவா யோசிக்காது போ ராஜா போ என்று பதிவிட்டார். இதற்கு சாந்தனு, வளர்ப்பு நல்லா இருந்தா இன்னொருத்தன் பத்தி விசாரிக்காமல் விமர்சிக்க தோணாது. கிளம்பி தம்பி, சொந்த மூஞ்சி காட்டாத உன்கிட்ட இதுக்கு மேல டைம் வேஸ்ட் பண்ண முடியாது என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement