கருக்கலைப்பு செய்த மருத்துவருடன் நடிகை சாந்தினி பேசிய ஆடியோ – மனைவியும் போலீசில் புகார். மணிகண்டன் தலை மறைவு

0
2995
shanthi
- Advertisement -

தன்னை முன்னாள் அமைச்சர் ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொள்வதாக கூறி தற்போது தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாக நாடோடிகள் பட நடிகை ஷாந்தினி தேவா கூறி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாடோடிகள் படத்தில் பிரபா என்ற கதாபாத்திரத்தில் காதல் ஜோடியாக நடித்தவர் சாந்தினி. மலேசியாவை சேர்ந்த இவர் சென்னையில் தான் தங்கி வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் முன்னால் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.

-விளம்பரம்-
நடிகை சாந்தினி

மணிகண்டன் தன்னை காதலித்ததாகவும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் சாந்தினி கூறியிருந்தார் மேலும் ஐந்து வருடங்களாக மணிகண்டன் வாழ்ந்துவந்த தான் அவரால் மூன்று முறை கருக்கலைப்பு செய்து இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்த நிலையில் அவரது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்ததாகவும் சாந்தினி கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : விருது வாங்கிட்டு இதான் பேசினேன் – விருதை திருப்பிக் கொடுத்ததற்கான காரணத்தை சொன்ன பாலாஜி முருகதாஸ்.

- Advertisement -

ஆனால், இப்போது திருமணம் செய்து கொள்ளாமல் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதோடு தன்னுடைய ஆபாச புகைப்படங்களை வைத்து மிரட்டுவதாகவும் சாந்தினி கூறியிருந்தார். ஆனால், முன்னாள் அமைச்சர் மணிகண்டனோ, சாந்தினியை தனக்கு யார் என்றே தெரியாது அவரை வைத்து பணம் பறிக்கும் கும்பல் ஒன்று தண்னிடம் பணம் கேட்டு பிளாக் மெயில் செய்வதாக கூறி இருந்தார்.

சாந்தினி அளித்த புகாரின் பெயரில் மணிகண்டன் மீது 6 வழக்குகள் போடப்பட்டுள்ளது. தான் கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில் மணிகண்டன் தலைமாறிவாகி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் நடிகை சாந்தினிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவருடன் நடிகை சாந்தினி பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இப்படி ஒரு நிலையில், நடிகை சாந்தினி, தன் கணவர் மீது பொய்யான தகவலை பரப்பி, தங்கள் குடும்பத்திற்கு அவமரியாதையையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி வருவதாகவும், இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கிடம் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி வசந்தி புகார் ஒன்றை அளித்துள்ளார்

-விளம்பரம்-
Advertisement