விருது வாங்கிட்டு இதான் பேசினேன் – விருதை திருப்பிக் கொடுத்ததற்கான காரணத்தை சொன்ன பாலாஜி முருகதாஸ்.

0
2637
balaji
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-201-1024x658.jpg

இந்த சீசனில் சர்ச்சை நாயகனாக வலம் வந்தவர் பாலாஜி. பாலாஜி பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை எக்கச்செக்க சர்ச்சைகளில் சிக்கினார். அதிலும் ஒரு எபிசோடில், பாலாஜி, சனம் ஷெட்டியை அட்ஜெஸ்ட்மண்ட் என்ற வார்த்தையை குறிப்பிட்டு அவதூறாக பேசி இருந்தார் என்று சர்ச்சை எழுந்தது. அதே போல ஆரியிடம் மரியாதை குறைவாக பேசியது, மைக்கை தூக்கி போட்டு உடைத்து என்று பல சர்ச்சைகளில் சிக்கினார்.

இதையும் பாருங்க : பக்கத்துக்கு வீட்டுகாரங்கள தொந்தரவு பண்ண கூடாதுனு போன் வாங்கினேன், அதுனால தான் – மாதவனின் பிளாஸ் பேக்.

- Advertisement -

அதே போல பாலாஜி ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பலர் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் பாலாஜிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு பல தனியார் மீடியா சார்பாக பல விருதுகள் வழங்கப்பட்டது. சமீபத்தில் கூட பிரபல டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயில் தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக உள்ள டாப் 20 பட்டியலை வெளியிட்டது.

இதில் பாலாஜி முருகதாஸ் இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் behindwoods சார்பாக இவருக்கு Biggest Sensation On Reality Television என்ற பட்டம் வழகப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த பட்டத்தை பாலாஜி திருப்பிக்கொடுப்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், Behindwoods மேடையில் நான் ரிவிவ் என்ற பெயரில் மற்ற போட்டியாளர்களை பற்றி தவறாக பேசாதீர்கள். அது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். ரிவியூ சொல்றவங்க எல்லாம் காந்தியோ மதர் தெராசாவோ இல்லனு தான் பேசினேன்.

-விளம்பரம்-
Advertisement