கொலை மிரட்டல், அடி உதை, ஆபாச புகைப்படத்தை அனுப்பி பிளாக் மெயில். புகைப்படங்களை பகிர்ந்த நடிகை.

0
5607
shanthini
- Advertisement -

தன்னை முன்னாள் அமைச்சர் ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொள்வதாக கூறி தற்போது தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாக நாடோடிகள் பட நடிகை ஷாந்தினி தேவா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நாடோடிகள் படத்தில் வரும் காதல் ஜோடியை கண்டிப்பாக மறந்திருக்க மாடீர்கள்.இந்த படத்தில் சசிகுமார், விஜய் வசந்த, அனன்யா, பரணி, அபிநயா கஞ்சா கருப்பு என்று ரசிகர்களுக்கு பரிச்சயமான பல்வேறு நடிகர்கள் நடித்திருந்தார்கள்.அதிலும் சம்போ சிவ சம்போ பாடல் இந்த படத்தின் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்து இருக்கும்.

-விளம்பரம்-

இந்த படத்தில் இவர்களது காதலுக்கு உதவப்போய் தான் சசிகுமார் மற்றும் அவர்கள் நண்பர்களுக்கு வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கும் . இந்த காதல் ஜோடியில் பிரபா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் என் பெயர் சாந்தி தேவி. நாடோடிகள் படத்திற்கு பின்னர் இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு இன்று வந்த ஷாந்தனி அ தி மு க முன்னாள் அமைச்சர் மீது புகார் அளித்துள்ளார்.

இதையும் பாருங்க : கெட்ட வார்த்தை வேணாம் – கர்ணன் படத்தால் தன்னை திட்டி தீர்ப்பவர்கள் பற்றி நட்டி போட்ட பதிவு.

- Advertisement -

இதுகுறித்து பத்திரிகையாளரை சந்தித்து பேசிய அவர், நான் மலேசியாவை சேர்ந்த பெண் சென்னையில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தங்கி வருகிறேன். அதே போல நான் மலேசியா சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தூதரகத்தில் பணிபுரிந்தபோதுஅடிக்கடி இந்தியா வந்து செல்வேன். இப்படித்தான் கடந்த 2017 மணிகண்டனை சந்தித்தேன் அதன்பின்னர் எனக்கு அவர் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொள்வார் நான் அழகாக இருப்பதாகவும் அவருக்கு என்னை மிகவும் பிடித்திருப்பதாகவும் என்னைத் திருமணம் செய்து கொள்வதாகவும் என்னிடம் கூறினார்.

அதேபோல அவரது மனைவியால் அவருக்கு எந்த சந்தோஷமும் இல்லை உன்னைப் போன்ற ஒருவர் வாழ்வில் இருந்தால் என் வாழ்க்கையை அழகாக இருக்கும் என்று என்னை சட்டப்படி திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி அளித்தார், நானும் அவரது வார்த்தையை நம்பி காதலில் விழுந்தேன். ஒரு வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம் சென்னையில் இருந்தவரை அவர் இரவில் என்னுடன் தான் தங்குவார். நான் வெளியில் சென்றால் கூட அமைச்சரின் வாகனத்தை தான் பயன்படுத்துவேன். இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கு சென்றுள்ளோம். ஆனால், என்னை திருமணம்செய்துகொள்ளும்படி கேட்டால் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Image

அதேபோல அவரால் நான் இரண்டுமூன்று முறை கர்ப்பமாக ஆனேன். ஆனால் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை வேண்டாம் என்று செய்ய கருகலைப்பு செய்ய வைத்தார். இப்போது என்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். அதேபோல என்னுடைய அந்தரங்க படங்களை எல்லாம் சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று என்னை மிரட்டுகிறார். அவரது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி என் மீது பல பொய் வழக்குகளைப் போட்டு என் வாழ்க்கையையே சீரழித்து விடுவதாகவும் என்னை மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து ஆதாரங்களையும் துறை கமிஷனர் நாகஜோதி இடம் பெற்றிருப்பதாகவும் சாந்தினி தெரிவித்திருக்கிறார்.

Advertisement