பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஷாரிக்.! கமலிடம் ஆவேசமாக பேசிய அம்மா..?

0
314
kamal

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவதாக வெளியேற்றபடும் நபருக்கான நாமினேஷன் ப்ராசஸ் இந்த வாரம் நடைபெற்றது. இதில் மும்தாஜ், பொன்னம்மபலம், பாலாஜி, ரித்விகா, மஹத், ஷாரிக் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் இந்த வாரம் வெளியேற்றபட்ட நபர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

shariq

இன்றைய (ஆகஸ்ட் 5) பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து 5 வது நபராக ஷாரிக் வெளியேற்றபட்டுள்ளார் என்று அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.. மேலும், இன்றைய நிகழ்ச்சியில் ஷாரிகின் அம்மாவும், நடிகையுமான உமா ரியாஸ் பிக் பாஸ் செட்டிற்குள் சென்றுள்ளார்

இந்த வாரம் நடைபெற்ற வாக்களிப்பில் ஷாரிக் இருப்பதிலேயே கம்மியான வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வாரம் வாக்களிப்பின் போது மஹத் மற்றும் ஷாரிக்கிற்கு இடையே தான் போட்டி நிலவியதாம். இறுதியில் ஷாரிக் கம்மியான வாக்குக்களை பெற்று இந்த வாரம் எலிமினேட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் ஷாரிக்கை அழைத்து செல்ல நடிகை உமா ரியாஸ் வந்துள்ளார். அவரிடம் கமல் மேடையில் சில நிமிடங்கள் உரையாடிய போது “என்ன மட்டும் Wild Card-ல விடுங்க சார்,அப்புறம் பாப்பீங்க” என்று கூற அதற்கு கமல்’நீங்க அப்படி பண்ணுவீங்கன்னு தெரிஞ்சி தான் உங்கள கூப்பிடல ‘ என்று கிண்டலாக கூறியுள்ளாராம்.

Shariq-Hassan-With-His-Mother

ஐஸ்வர்யா செய்த சில மோசமான செயல்கள் நடிகை உமா ரியாஸிற்கு எரிச்சலை ஊட்டியுள்ளது.இந்த காரணத்தால்தான் உமா ரியாஸ் கமலிடம் தானாக முன்வந்து என்னை பிக் பாஸ் வீட்டுக்குள் விடுங்க என்று கேட்டுள்ளார்.