ஷாரிக்கின் அம்மா உமா ரியாஸ் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவாரா..? மக்கள் கருத்து

0
1542
Uma-Riyaz
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழிச்சி நாளிற்கு நாள் பரபரப்பாகி கொண்டி செல்கிறது. நிகழ்ச்சி ஆரம்பமாகி 50 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் நேற்று(05, ஆகஸ்ட்) ஷாரிக் அவர்கள் வெளியேற்றப்பட்டார். வெளியேற்றத்தின் போது வீட்டில் உள்ள போட்டியார்கள் பலரும் கண் கலங்கினார்கள்.

-விளம்பரம்-
uma
uma

ஷாரிக் அவர்கள் வெளியேற இருப்பதால், அவரது அம்மா உமா ரியாஸ் அவர்களும் நேற்றய நிகழ்ச்சியை நேரில் காண வந்திருந்தார். ஷாரிக் அவர்களின் வெளியேற்றத்தின் போது உமா ரியாஸ் மேடைக்கு அழைக்கப்பட்டார். அப்போது அவர் கமல் அவர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்தார்.

- Advertisement -

அது என்ன கோரிக்கை என்றால், Wild Card எண்ட்ரியாக தன்னை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டுமாறும், அவ்வாறு அனுமதித்தால் அவர் உள்ளெ சென்று “வச்சு செய்வேன்” என்றும் கூறினார். அவர் கூறும் போது நேரில் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் கர கோஷமிட்டு அவருக்கு ஆதரவு தெரிவுத்துருந்தனர். அதோடு கமல் மற்றும் அவரது மகன் ஷாரிக் அவர்களும் சிரித்துவிட்டனர்.

இதன் அடிப்படையில் சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு பெரும் ஆதரவு பெருகி வருகிறது, எங்களது ட்விட்டர் தலத்தில் நாங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் அவர் வர வேண்டும் என்று 70 சதவீக்கத்திற்கும் மேல் வாக்குகள் அளித்துள்ளனர்.

-விளம்பரம்-

உமா ரியாஸ் அவர்களுக்கு ஆதரவு பெருகி வருவதால் அவர் Wild Card எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இயல்பிலேயே சற்று கோவமும் துணிச்சலும் நிறைந்த உமா ரியாஸ் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றால் நிச்சயம் சுவாரசியம் கூடும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

Advertisement