காரில் ஏறி அத்துமீறிய ரசிகர் – ஒரு நொடி ஷாக்கான விஜய் பட நடிகை – வைரலாகும் வீடியோ.

0
457
Shilpa
- Advertisement -

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் காரில் அத்துமீறி வாலிபர் ஒருவர் ஏறி உள்ள தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷில்பா செட்டி. இவர் தன்னுடைய பதினாறு வயதில் இருந்தே மாடலிங் மூலமாக தனது கேரியரை தொடங்கினார். அதன் மூலமாக பாஜிகர் என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின் இவர் இந்தியில் உள்ள பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

-விளம்பரம்-

தமிழில் 1996 ஆம் ஆண்டு வெளியான ‘மிஸ்டர் ரோமியோ’ என்ற படத்தில் பிரபு தேவா உடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் குஷி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியும் இருந்தார். இதைத்தொடர்ந்து சில்பா செட்டி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் பிசியாக வலம் வந்து கொண்டிருந்தார்.

- Advertisement -

ஷில்பா ஷெட்டியின் திரைப்பயணம்:

மேலும், இவர் கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். அதோடு இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 வில் சில்பா செட்டி பங்கு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இவர் 2009ம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2012 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

ஷில்பா ஷெட்டி குடும்பம்:

பின்னர் சில்பா செட்டியால் இரண்டாம் குழந்தை பெற்று எடுக்க முடியாத காரணத்தினால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார். இது குறித்து அப்போது பலரும் விமர்சித்து இருந்தார்கள். தற்போது இவர் படங்களில் நடித்தும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார். அதுமட்டுமில்லாமல் யோகா தொடர்பான விழிப்புணர்வையும் சில்பா செட்டி நடத்தி இருக்கிறார். மேலும், இவர் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

-விளம்பரம்-

மும்பைக்கு சென்ற ஷில்பா ஷெட்டி:

அதில் அவர் அடிக்கடி தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டும் வருகிறார். இந்நிலையில் ஷில்பா ஷெட்டியின் காரில் வாலிபர் ஒருவர் அத்துமீறி ஏறி உள்ள தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை ஸ்மிருதி கண்ணாவின் மகள் பிறந்தநாள் விழாவில் சில்பா செட்டி பங்கேற்க மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு காரில் வந்துள்ளார். அதன்பின் விழாவை முடித்துவிட்டு சில்பா செட்டி தனது வீட்டிற்கு திரும்புவதற்காக காரில் ஏறி உட்கார்ந்தார்.

காரில் அத்துமீறி ஏறிய வாலிபர்:

அப்போது வாலிபர் ஒருவர் அத்து மீறி காரினுள் ஏறி உட்கார்ந்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சில்பா செட்டி வாலிபரை கீழே இறங்குமாறு கூச்சலிட்டார். ஷில்பா ஷெட்டியின் சத்தத்தை கேட்டு ஓடி வந்த பாதுகாவலர்கள் அந்த காரில் இருந்து வாலிபரை வெளியேற்றினர். அதன் பின்பு பாதுகாப்பாக ஷில்பா ஷெட்டி அவரது காரில் அனுப்பி வைக்கப்பட்டார். ஷில்பா ஷெட்டியுடன் புகைப்படம் எடுப்பதற்காத்தான் காரில் ஏறியதாக அந்த வாலிபர் தெரிவித்துள்ளார்.

Advertisement