அம்மா கீழ விழுந்து கை கால் வரல, அவருக்காக பிரார்த்தனை செய்ங்க – ராகவ் மனைவி ப்ரீத்தா கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ.

0
1854
Preetha
- Advertisement -

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஜோடி ராகவ்–பிரீத்தா. இவர்களை யாரும் மறந்து இருக்க மாட்டீங்க? கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஜோடி தான் ராகவ்–பிரீத்தா. இப்போ எல்லோருக்கும் ஞாபகம் வந்து இருக்கும். ராகவின் முழு பெயர் வெங்கட்ராகவன் ரங்கநாதன். இதை தான் சுருக்கி ராகவ் என்று சினிமா துறையில் வைத்துக் கொண்டார். இவர் சினிமா துறையில் நடிகர் மட்டுமல்லாமல் மியூசிக் கம்போஸ்ஸர், தொகுப்பாளர், இயக்குனர் என பல முகங்களைக் கொண்டு உள்ளார்.

-விளம்பரம்-

மேலும், நடிகர் ராகவ் முதலில் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்தும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் தான் இருந்தார். பின் தன் மனைவியுடன் பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதற்கு பிறகு இவருக்கு வெள்ளித்திரையில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டும் இல்லாமல் நடிகர் ராகவ் ஒரு சிறந்த டான்ஸர் என்றும் சொல்லலாம். இவர் நிறைய நடன நிகழ்ச்சிகளில் கலந்து வெற்றியும் பெற்று உள்ளார். இவர் முதன்முதலாக தன்னுடைய நடன திறமையை விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சியில் தான் வெளிப்படுத்தினார்.

- Advertisement -

ராகவ் திரைப்பயணம்:

அதனை தொடர்ந்து இவர் ஜோடி நம்பர் 1, டான்ஸ் ஜோடி டான்ஸ், மானாட மயிலாட போன்ற பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்று உள்ளார். அதோடு ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இவர் டான்சில் மட்டும் டாப் இல்லைங்க படிப்பிலேயும் டாப் தாங்க. இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியரிங்கில் கோல்ட் மெடல் பட்டம் பெற்றவர். அதற்கு பிறகு சார்லஸ் இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளி வந்த ‘நஞ்சிபுரம்’ படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

ராகவ்-ப்ரீத்தா குடும்பம்:

ஆனால், இவர் இதற்கு முன்னரே பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் நடிகர் ராகவ் “டிக்கெட்” என்ற படத்தை இயக்கியும், நடித்தும் உள்ளார். இந்த படம் இங்கிலாந்து நாட்டில் வெளியானது. அதுமட்டுமில்லாமல் இங்கிலாந்து நாட்டில் வெளியான முதல் தமிழ் படம் என்ற பெருமையும் பெற்றது. இதனிடையே நடிகர் ராகவ் தன் உடன் பணி புரிந்த நடிகை ப்ரிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ப்ரிதாவும் சமையல் குறிப்பு, ஆன்மீகம் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

-விளம்பரம்-

இன்ஸ்டாவில் பிரீத்தா பதிவிட்ட வீடியோ:

அதுமட்டும் இல்லாமல் இவர் பல டிவி தொடர்களிலும் நடித்து உள்ளார். மேலும், இவர் சினிமா துறையில் அறிமுகமானது மாதவன் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த ‘டும் டும் டும்’ படத்தில் தான். இவர்களுக்கு தனிஷா என்ற ஒரு பெண்ணும் உள்ளார். இந்த நிலையில் ப்ரீத்தா இன்ஸ்டாவில் வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, ஹாய் என்னுடைய இன்ஸ்டா பேமிலி. என்னுடைய அம்மாவிற்காக எல்லோருமே பிரார்த்தனை செய்யுங்கள். இன்னைக்கு காலையில் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. அது என்னவென்றால், என்னுடைய அம்மா தவறி கீழே விழுந்து விட்டார். அதனால் அவர்களால் பேச முடியவில்லை, கைகால் செயலிழந்து விட்டது.

வீடியோவில் பிரீத்தா கூறியது:

இதற்கு முன்பே என் அம்மாவிற்கு இரண்டு முறை சர்ஜன் செய்து இருக்கிறோம். அதற்கான ட்ரீட்மெண்ட் போய் கொண்டிருக்கும் போது இடையில் இப்படி நடந்திருப்பது ரொம்ப மன வேதனையாக இருக்கிறது. தயவுசெய்து எல்லோரும் என்னுடைய அம்மாவிற்காக வேண்டிக்கொள்ளுங்கள். அவர்கள் சீக்கிரம் குணமடைந்து வரவேண்டும் என்று கண்ணீர் மல்க கூறி இருக்கிறார். இப்படி பிரித்தா பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் ப்ரிதாவிற்கு ஆறுதல் கூறி கமெண்ட் போட்டு வருகிறார்கள்

Advertisement