சாதி பெயரை நீக்கிவிட்டு இப்படி செய்யலாமா ? – வாத்தி பட நடிகையை வறுத்தெடுத்த பீஸ்ட் நடிகர்.

0
821
shinetom
- Advertisement -

நடிகை சம்யுக்தா மேனன் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான “வாத்தி” படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். நடித்திருந்தார். இந்நிலையில் “வாத்தி” படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய “என்னுடைய பெயர் சம்யுக்தா தான் ஆனால் மேனன் என்பது என்னுடைய ஜாதியின் பெயர். நான் எப்போதுமே ஜாதியை விரும்புவதில்லை. மலையாள சினிமாவில் பல பேர் சம்யுக்தா என பெயர் வைத்திருப்பதினால் செய்து ஊடங்கங்கள் என்னை மட்டும் சுட்டி காட்ட மேனன் என்று கூறுகின்றனர்.

-விளம்பரம்-

எனவே தயவு செய்து அந்த மேனன் என்பதை நீக்கி விடுங்கள் எனக்கு ஜாதி பிடிக்காது. என்னை பெயரை மட்டுமே சொல்லி அழைத்தால் போதும் என்று அந்த பேட்டியில் கூறினார் வாத்தி பட நாயகி சம்யுக்தா. இதனை தொடர்ந்து தற்போது நடிகை சம்யுக்தா மேனன் “பூமராங்” என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதாநாயகனாக விஜய் படத்தில் நடித்த டாம் சாக்கோ நடித்திருக்கிறார்.

- Advertisement -

டாம் சாக்கோ :

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கொச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வராத நடிகை சம்யுக்தா மேனனை விமர்சித்து படத்தின் கதாநாயாகன் டாம் சாக்கோ பேசியிருந்தார். நடிகர் டாம் சாக்கோ பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தவர் டாம் சாக்கோ. இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் இவர் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தான் நடித்திருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, இவர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும் போது மனதில் உள்ளதை பேசுகிறேன் என்று சொல்லி ஏடாகூடமாக ஏதாவது ஒன்று பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வதையே வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் பீஸ்ட் படம் வெளிவந்த போது அந்த படம் என்னை ஈர்க்கவே இல்லை என்று கூறி விமர்சனத்திற்கு உள்ளகி இருந்தார். இந்த நிலையில் தான் “பூமராங்” படத்தில் ப்ரோமோஷனுக்கு வராத நடிகை சம்யுக்தா மேனன் மெது அதிர்ப்த்தி தெரிவித்து விமர்சித்துள்ளார்.

-விளம்பரம்-

பூமராங் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சி :

பூமராங் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டாம் சாக்கோவிடம் பத்திரிகையாளர் ஒருவர் நடிகை சம்யுக்தா மேனன் தன்னுடைய சாதி பெயரை கைவிட்டது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வராத சம்யுக்தா மேனன் தன்னுடைய ஜாதி பெயரை கைவிடுவதினால் யாருக்கு என்ன பலன்? ஒரு வேலையே ஆரம்பித்தால் அதனை நல்லபடியாக முடித்து கொடுக்க வேண்டும்.

அவர் பெயரை மாற்றினால் என்ன நன்மை :

அவர் மேனனாகவோ, முஸ்லீமாகவோ, இந்துவாகவோ, கிறிஸ்த்தவராகவோ இருந்தால் யாருக்கு என்ன பயன் ? அவர் ஏன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வரவில்லை. ஒரு மனிதனாக இருந்தால் தன்னுடன் இருக்கும் சக மனிதர்களின் உணர்வை புரிந்து கொள்ளவேண்டும் என்று டாம் சாக்கோ கூறினார். இவர் தற்போது நடிகை சம்யுக்தா மேனன் விமரிசித்து பேசியிருப்பது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement