தங்கமெல்லாம் எதற்கு நீங்கள் சொன்ன இந்த வார்த்தை போதும்..!சிவகார்த்திகேயன் உருக்கம்..!

0
659
shivakarthikeyan
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்திகேயனைன் வளர்ச்சி மிகவும் பாராட்டக்கூடிய விடயம் என்று அனைவரும் அறிவோம். சாதாரண மேடை கலைஞராக தனது பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

இதுநாள் வரை நடிகராக இருந்த சிவகார்த்திகேயன் தற்போது கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரமெடுத்துள்ளார். இந்த படத்தை பாடகரும் சிவகார்திகேயனின் நெருங்கிய நண்பருமான அருண் ராஜா காமராஜ் இயக்கியுள்ளார்.

இதையும் படியுங்க : 15 லட்சம் கடன்..!டாக்டர் படிக்க அக்கா பட்ட கஷ்டம்..!உருக்கமுடன் பேசிய சிவகார்த்திகேயன்..!

- Advertisement -

பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி முதன் முறையாக வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு ரசிகர் ஓருவர், இப்படி ஒரு படத்தை தந்த சிவகார்த்தியனுக்கும், அருண்ராஜாவிற்கும் தங்க மோதிரம் போட வேண்டும் என்று மிகவும் உருக்கமாக கூறியிருந்தார்.

இந்த பதிவிற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், அந்த தங்க மோதிரத்தை விட உங்கள் வாழ்த்துக்கள் தான் பெரிது ப்ரோ. உங்களை போல பலரும் வாழ்த்துவதை பார்த்து எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement