குட் பேட் அக்லி படத்தின் இயக்குனர் மீது போலீசில் புகார் அளித்து இருக்கும் சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை கடின உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த படம் ‘விடா முயற்சி’.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படம் மொத்தமாக 150 கோடி வரை வசூல் செய்து இருக்கிறது. சமீபத்தில் நடிகர் அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். குட் பேட் அக்லி படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருக்கிறார்கள்.
குட் பேட் அக்லி படம்:
மேலும், இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. அஜித்தின் பேன் பாயாக ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை எடுத்திருக்கிறார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு படம் தாறுமாறாக இருக்கிறது. மேலும், இந்த படத்தில் வின்டேஜ் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதை ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். அதிலும் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு பிரியா வாரியார் நடனமாடிய காட்சி எல்லாம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

படம் குறித்த தகவல்:
இது மட்டுமில்லாமல் இந்த படத்தில் இளமை இதோ இதோ, ஒத்த ரூபா தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி போன்ற பாடல்கள் எல்லாம் பயன்படுத்தப்படுகிறது. இந்த படம் 200 கோடிக்கும் மேல் அதிக வசூலை ஈட்டி வருகிறது. இந்த படம் இனியும் அதிக வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் தற்போது குட் பேட் அக்லி படம் சர்ச்சையில் சிக்கிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, குட் பேட் அக்லி பட இயக்குனர் மீது தமிழ்நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் நல சங்கத்தினர் சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.

குட் பேட் அக்லி இயக்குனர் மீது புகார்:
அதில், அஜித்குமார் நடித்த குட் பேட் அக்லி படத்தில் வில்லனாக அர்ஜுன் தாஸ் நடித்திருக்கிறார். இவர் இளம் பெண்களுடன் பாடல் காட்சிகளில் நடனம் ஆடுவது போன்ற அருவருக்கத்தக்க வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது. பெண்களை ரொம்ப இழிவாகவும் அரைகுறை ஆடைகளுடனும் இயக்குனர் நடனமாட வைத்து இருக்கிறார். பெண்களின் கண்ணியத்தையும் கௌரவத்தையும் சிதைக்கும் வகையில் ஒரு பிம்பத்தை இந்த படத்தில் இயக்குனர் உருவாக்கி இருக்கிறார். சிறிதளவு கூட சமூக அக்கறை இல்லாமல் இந்த படத்தை இயக்குனர் ஆதித் ரவிச்சந்திரன் உருவாக்கியிருக்கிறார். இதனால் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் பெண்களை இழிவு படுத்தி காட்டப்பட்ட காட்சிகளையும் படத்திலிருந்து நீக்க வேண்டு என்று கூறியிருக்கிறார்கள்.

படத்தின் கதை:
படத்தில் அஜித் இந்தியாவே நடுங்கும் அளவுக்கு மிகப்பெரிய கேங்ஸ்டர் ஆக இருக்கிறார். அந்த வேலையால் அஜித்தினுடைய குடும்பத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வருகிறது. இதனால் திரிஷா மனம் உடைந்து தன் கணவரை விட்டு பிரிந்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பிறந்த குழந்தையை கூட பார்க்க விடாமல் திரிஷா தடுக்கிறார். இதனால் அஜித் போலீஸிடம் சரண்டர் ஆகி விடுகிறார். பின் 17 வருடம் கழித்து தன்னுடைய கேங்ஸ்டர் தொழில் எல்லாம் விட்டுட்டு தன்னுடைய மகனை பார்க்க அஜித் வருகிறார். அப்படி வரும்போது அஜித் உடைய மகனை அர்ஜுன் தாஸ் போலீஸ் இடம் ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்க வைத்து விடுகிறார். இதனால் நன்றாக இருந்த அஜித் மீண்டும் வில்லனாக மாறுகிறார். அர்ஜுன் தாஸ் ஏன் அஜித்துடைய மகனை ஜெயிலுக்கு அனுப்பினார்? அதற்கான காரணம் என்ன? தன் மகனை ஜெயிலில் இருந்து அர்ஜுன் மீட்டாரா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.






