என் மகளுக்கு ஒரு வயசு ஆகிடிச்சி, போன வருஷம் 7 : 40 க்கு பிறந்தாள் – மகள் பிறந்தநாளில் ஸ்ரேயாவின் செம குயூட் பதிவு.

0
414
shriya
- Advertisement -

தன் மகளுக்கு ஒரு வயது ஆகிவிட்டது என்று ஸ்ரேயா வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். மாடல் அழகியான இவர் ஆரம்பத்தில் விளம்பரப் படங்களில் நடித்து வந்தார் அதன் பின்னர் தமிழில் வெளியான உனக்கு 20 எனக்கு 18 என்ற படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார் ஸ்ரேயா. நடிகை ஸ்ரேயா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,நடிகர் விக்ரம், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.

-விளம்பரம்-

தொடர்ந்து படங்களில் நடித்து ஸ்ரேயா இடையில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். இடையிடையே ஒரு சில படங்களில் நடித்து ஸ்ரேயா இடையில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு திடீரென்று ரஸ்யாவை சேர்ந்த தனது காதலர் (Andrei Koscheev)ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் வெளிநாட்டில் செட்டில் ஆனார்.

- Advertisement -

திருமணத்திற்கு பின்னும் நடித்து வரும் ஸ்ரேயா :

பின்னர் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார். பின்னர் ஒரு சில படங்களில் மீண்டும் நடிக்க துவங்கினார். அதிலும் தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் RRR படத்தில் ஒரு முக்க்கிய கதாபாரத்திரத்தில் நடித்து இருக்கிறார் ஷ்ரேயா. இந்த படம் சமீபத்தில் வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போய்யுள்ளது.

குழந்தை பிறந்ததை திடீரென்று அறிவிப்பு :

இதை தவிர நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் சண்டைக்காரி, நரகாசுரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதே போல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு குழந்தை பிறந்துவிட்டதாக திடீரென்று அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து இருந்தார். பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பிரபலங்கள் தாங்கள் கர்ப்பமாக இருப்பதை படு வித்தியாசமாக அறிவிப்பார்கள்.

-விளம்பரம்-

பல மாதங்கள் கழித்தே குழந்தையின் முகத்தை காட்டிய ஸ்ரேயா :

அதுமட்டுமல்லாமல் கர்ப்பமான முதல் நாள் முதல் குழந்தை பிறக்கும் வரை விதவிதமான போட்டோ ஷூட்களை எடுத்து அதை சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், தான் கர்ப்பமாக இருப்பதை கூட அறிவிக்காமல் படு சீக்ரெட்டாக வைத்து குழந்தை பிறந்து பல மாதங்கள் கழித்தே அறிவித்தார் ஸ்ரேயா. குழந்தை பிறந்த பின் தன் மகளின் புகைப்படத்தை அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.

தன் மகளின் முதல் பிறந்தநாள்.

இந்த நிலையில் தனது குழந்தையின் முதலாவது பிறந்த நாளை முன்னிட்டு தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கடற்கரையில் குளித்து கொண்டே குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களையும் குழந்தையுடன் விளையாடும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்துள்ளார். அதில் கடந்த ஆண்டு 7 : 40 க்கு பிறந்தால் என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்ரேயா. இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள், கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

Advertisement