சிகரெட் வாசனையும் இதன் வாசனையும் ரொம்ப பிடிக்கும். கமலின் மகள் ஓபன் டால்க்.

0
1419
sruthi
- Advertisement -

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவரது மகள் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். கமல் ஹாசனின் ‘ஹேராம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் ஸ்ருதி ஹாசன். அவர் ஹீரோயினாக அறிமுகமான முதல் படம் ‘லக்’. அதுவும் முதல் படமே பாலிவுட் திரையுலகில். அதனைத் தொடர்ந்து ‘அனகனகா ஓ தீருடு’ என்ற தெலுங்கு படத்திலும், ‘தில் தோ பச்சா ஹாய் ஜி’ என்ற ஹிந்தி படத்திலும் நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்தார்.

-விளம்பரம்-

ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகுடன் தனது திரை பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை ஸ்ருதி ஹாசன், அடுத்ததாக தமிழ் திரையுலகில் நுழையலாம் என முடிவெடுத்தார். அவர் தமிழில் என்ட்ரியான முதல் படம் ‘7-ஆம் அறிவு’. கதையின் நாயகனாக சூர்யா நடித்திருந்த இந்த படத்தினை பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார்.

- Advertisement -

அதன் பிறகு தனுஷின் ‘3’, விஷாலின் ‘பூஜை’, ‘தளபதி’ விஜய்யின் ‘புலி’, ‘தல’ அஜித்தின் ‘வேதாளம்’, சூர்யாவின் ‘சி 3’ என அடுத்தடுத்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்களுக்கு ஜோடியாக நடித்தார் ஸ்ருதி ஹாசன். சமீபத்தில், வெளி வந்த ‘ஃப்ரோஸன் 2’ என்ற ஹாலிவுட் அனிமேஷன் படத்தின் தமிழ் வெர்ஷனில் வந்த ‘எல்சா’ ரோலுக்கு தமிழில் டப்பிங் பேசியிருந்தார் ஸ்ருதி ஹாசன்.

தற்போது, ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது தனக்கு மிகவும் பிடித்த வாசனைகள் “சாக்லேட், சிகரெட் (புகைக்க அல்ல. ஆனால், அதன் வாசனை எனக்கு மிகவும் பிடிக்கும்), ரப்பர், பென்சில் துகள்கள், ரோஸ்” என்று ஒரு பட்டியலிட்டு தெரிவித்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன். இப்போது தமிழில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘லாபம்’ என்ற படமும், தெலுங்கில் ‘மாஸ் மகா ராஜா’ ரவி தேஜாவின் ‘க்ராக்’ என்ற படமும் கைவசம் வைத்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.

-விளம்பரம்-
Advertisement