பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மகள் வீட்டில் நேர்ந்த இழப்பு. சோகத்தில் பச்சன் குடும்பம்.

0
60815
amitab
- Advertisement -

பாலிவுட் சினிமா உலகின் மெகா சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் அமிதாப் பச்சன். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். இந்தியாவில் மிகப் பிரபலமான சினிமா நடிகர்களில் இவரும் ஒருவர் என்பதில் எந்த ஒரு ஐயமும் கிடையாது. நடிகர் அமிதாப் பச்சன் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் பின்னணி பாடகர், திரைப்பட தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் பிரபல திரைப்பட நடிகை ஜெய பாதுரியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அபிஷேக் பச்சன், ஸ்வேதா பச்சன் என்ற இரு பிள்ளைகள் உள்ளார்கள்.

-விளம்பரம்-

- Advertisement -

இவர் தன்னுடைய நடிப்புத் திறமைக்காக வாங்காத விருதுகளே இல்லை. நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனும் பாலிவுட் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர். அபிஷேக் பச்சனின் மனைவி தான் உலக அழகி ஐஸ்வர்யா ராய். பாலிவுட்டின் முன்னாள் பிரபல நடிகர் ராஜ் கபூரின் மகளும், அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா பச்சனின் மாமியார் ஆன ரிது நந்தா அவர்கள் இன்று காலமானார். நடிகர் அமிதா பச்சனின் மகள் ஸ்வேதா பச்சன் அவர்கள் நிகல் நந்தா என்பவரை 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். எஸ்கார்ட் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் தான் நிகல் நந்தா.

இதையும் பாருங்க : விஜய் சாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். குருவி படத்தை கிண்டல் செய்த நடிகர் பவன் பேட்டி.

ஸ்வேத்தா பச்சனின் மாமியார் தான் ரிது நந்தா. தற்போது இவர் காலமாகி உள்ளார். ரிது நந்தா அவர்களுக்கு தற்போது 71 வயதாகிறது. இவர் சமீப காலமாகவே புற்றுநோயால் அவதிப்பட்டு வந்து உள்ளார். இவருக்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இன்று அதிகாலை ரிது நந்தா அவர்கள் சிகிச்சை பலனின்றி காலமானார். இதனால் பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ரிது நந்தா அவர்கள் ஹிந்தியில் திரைப்பட நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டவரின் மகளாவார். அவர் வேற யாரும் இல்லை பாலிவுட்டில் மிகப் பிரபலமான முன்னாள் நடிகர் ராஜ்கபூர் ஆவார்.

-விளம்பரம்-

நடிகர் ராஜ் கபூர் அவர்கள் 1970களில் முதன் முதலாக பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். பின் நடிகர் ராஜ் கபூர் அவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தி திரை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர். மேலும், நடிகர் அமிதாப் பச்சன் உட்பட பல்வேறு பிரபலங்கள் ரிது நந்தாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்கள். சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement