போன டிசம்பரில் கல்யாணம், இந்த டிசம்பரில் விவாகரத்து. சீரியல் நடிகையின் சோகம்.

0
36111
swetha-bashu
- Advertisement -

கடந்த டிசம்பரில் கல்யாணம் செய்து இந்த டிசம்பரில் விவாகரத்து பெறுகிறார் நடிகை ஸ்வேதா பாசு பிரசாத். இது குறித்து சமூக வலைத் தளங்களில் பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. நடிகை ஸ்வேதா பாசு அவர்கள் சிறு வயதிலேயே இந்தித் திரைப் படங்களிலும், ஹிந்தி தொலைக்காட்சித் தொடர்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானார். பின் இவர் பெங்காலி, தெலுங்கு, தமிழ், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
Related image

சினிமா பிரபலங்கள் எப்போதும் கல்யாணம் செய்து கொண்டு ஒரு வருடம் கூட முழுமையாக சேர்ந்து வாழ மாட்டார்கள். உடனுக்குடனே கோர்ட், விவாகரத்து தான். அதில் ஒரு சில பேர் தான் பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்கிறார்கள். அதுவும் தற்போது இருக்கும் தலை முறையினர் எல்லோருமே சின்ன விசயத்திற்கு கூட டிவோர்ஸ் செய்து கொள்கிறார்கள். அந்த அளவிற்கு நம் கலாச்சாரமும், பாரம்பரியமும் மாறி விட்டது. அதில் இவர்கள் மட்டும் என்ன விதி விலக்கா????

இதையும் பாருங்க : பிகில் படத்திற்கு பின்னர் விளையாட்டு கதை என்றாலே தெறித்து ஓடும் நடிகை. அவரே கூறிய விளக்கம்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் உதயா, கருணா நடித்த சந்தமாமா, ஒரு முத்தம் ஒரு யுத்தம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை ஸ்வேதா பாசு. இவர் தமிழை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல படங்களில் நடித்து உள்ளார். ஆனால், இவர் அதிகம் பாலிவுட்டில் தான் வலம் வந்தார். இந்நிலையில் பாலிவுட் பட இயக்குனரும், நெருங்கிய நண்பருமான ரோஹித் மிட்டல் என்பவரை நடிகை ஸ்வேதா பாசு காதலித்து வந்தார். பின் இவர்கள் காதல் குறித்து தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்தார்கள். மேலும், இவர்கள் இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் மும்பயில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள்.

பின் டிசம்பர் 13 ஆம் தேதி புனேவில் கோலாகலமாக இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் கூட முழுமையாக இருக்காது. ஆனால், தனது கணவரை விவாகரத்து செய்வதாக உள்ளேன் என்று நடிகை ஸ்வேதா பாசு தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து உள்ளார். இதை பார்த்த ரசிகர்களும், நெட்டிசன்களும் சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இது பற்றி நடிகை சுவேதா பாசு பிரசாத் கூறியது, பல மாதங்கள் யோசனைக்கு பிறகு தான் நான் இந்த முடிவை எடுத்து உள்ளேன். அதோடு நாங்கள் இருவரும் சேர்ந்து தான் இந்த முடிவை எடுத்தோம்.

-விளம்பரம்-

எல்லா புத்தகங்களையும் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை படிக்க முடியாது. அதற்காக அந்த புத்தகம் மோசம் இல்லை என்று சொல்ல முடியாது. அதே மாதிரி தான் வாழ்க்கை. என் வாழ்க்கையில் சில நல்ல நினைவுகளையும் அவர் எனக்கு ஏற்படுத்தியும், ஊக்கப்படுத்தியும் உள்ளார். அதற்காக நான் ரோஹித்துக்கு நன்றி சொல்கிறேன். இனிமையான வாழ்க்கை உனக்கு இருக்கிறது என்று தெரிவித்து உள்ளார். சில வருடங்களுக்கு முன் இவர் ஹைதராபாதில் பாலியல் தொழில் செய்வதாக கைது செய்யப்பட்டார். இதனால் கூட இவர்கள் தற்போது பிரிவதற்கு காரணமாக இருக்குமோ?? என்று பலரும் கூறி வருகிறார்கள். திருமண நாளை கொண்டாடும் ஒரு நாள் முன்பாக ஸ்வேதா எடுத்துள்ள இந்த முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement