தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, சில வருடத்திற்கு முன் சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். கடந்த ஆண்டு தான் இவர் அந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வந்தார்.

தற்போது இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் சமந்தா அவர்கள் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். பின் நான்கு ஆண்டுகளில் இருவரும் பிரிந்து விட்டார்கள். விவாகரத்திற்கு பின் சமந்தா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், சில மாதங்களாக சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலரும் இருவரும் காதலிப்பதாக சொல்லி வந்தார்கள். ஆனால், இதற்கு இருவருமே மறுப்பு தெரிவிக்கவில்லை.
சமந்தா குறித்த தகவல்:
ஒத்துக்கொள்ளவும் இல்லை. இதனால இவர்கள் இருவருடைய உறவு பற்றி சோசியல் மீடியாவில் காட்டு தீயை போல ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டிருக்கிறது. மேலும், சமந்தாவிற்கு திருமணமாகி இருக்கும் தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது சமந்தாவுக்கும் ராஜ் நிடிமோருவுக்கும் இன்று கோவையில் உள்ள ஈசா யோகா மையத்தில் தான் திருமணம் செய்திருக்கிறார்கள். இது இவர்கள் இருவருக்கும் இரண்டாவது திருமணம். இவர்களுடைய திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள்.

சமந்தா-ராஜ் திருமணம்:
தற்போது சோசியல் மீடியா முழுவதும் சமந்தாவின் திருமண செய்திதான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மேலும் இது தொடர்பாக சமந்தா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வை அறிவிப்பை வெளியிட்டும், திருமண புகைப்படங்களையும் பகிர்ந்து இருக்கிறார். ஈஷா யோகா மையத்தில் இருவரும் மாலை மாற்றி, கையில் மோதிரம் அணிந்து கொண்ட புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சியாமலி தே பதிவு:
இதை பார்த்து பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமந்தாவின் திருமணம் பற்றி இயக்குனர் ராஜின் முன்னாள் மனைவி போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது சமந்தா இரண்டாம் திருமணம் பற்றி இயக்குனர் ராஜின் முன்னாள் மனைவி சியாமலி தே போட்ட பதவில், நம்பிக்கை இல்லாதவர்கள் நம்பிக்கை அற்ற செயல்களை செய்கிறார்கள் என்று கூறி இருக்கிறார்.






