ரோஜா சீரியல்னு இல்லனா உங்கள யார்னே தெரிஞ்சி இருக்காது – ரோஜா சீரியலை மட்டம் தட்டிய சிபுவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

0
641
roja
- Advertisement -

சமீப காலமாகவே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சின்னத்திரை தொடர்கள் இருக்கிறது. கொரோனா லாக் டவுனில் இருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சீரியலை விரும்பி பார்த்து வருகிறார்கள். அதில் எப்போதும் சன் டிவி முதலிடத்தை பிடித்து விடும் என்பதில் அய்யமில்லை. டிஆர்பி ரேட்டிங்கிலும் சன் டிவி முதல் இடம் பிடித்து வருகிறது. அந்த வகையில் சில வருடமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி போட்ட தொடர்களில் ‘ரோஜா’ சீரியலும் ஒன்று. இந்த சீரியல் டிஆர்பியிலும், மக்கள் மனதிலும் முதல் இடத்தைப் பிடித்துஇருந்தது.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் இந்த சீரியல் தான் டாப் இடத்தை பிடித்து இருந்தது. இதனால் ரோஜா சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியது. மேலும், 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக சென்றது. ரோஜா சீரியலில் ஹீரோவாக சிபு சூர்யனும், ஹீரோயினாக பிரியங்கா நல்காரியும் நடித்தனர்.

- Advertisement -

சீரியலில் விலகிய சிபு சூர்யன்:

இந்தநிலையில் ரோஜா சீரியல் இருந்து சிபு சூர்யன் திடீரென விகுவதாக தன் சமூக வலைத்தளத்தில் அறிவித்து இருந்தார். சிபு சூரியன் விலகுவதாக அறிவித்து இருப்பது ரசிகர்களுக்கு ஷாக்கை கொடுத்திருந்தது. இவரின் இந்த பதிவை கண்டு அதிர்ச்சியான ரசிகர்கள் பலர் சீரியலை தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தனது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் சீரியலில் தொடருவதாக அறிவித்தார் சிபு .

நிறைவு பெற்ற ரோஜா தொடர் :

இப்படி ஒரு நிலையில் கடந்த நவம்பர் மாதம் இந்த தொடர் நிறைவடைந்தது. இந்த தொடரின் கடைசி நாள் எபிசோடில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருந்த சிபு அர்ஜுன் சாராக எனது கடைசி நாள். எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பு நிறுவனம், இயக்குனருக்கு நன்றி. அதோடு எனது ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி, விரைவில் உங்களை வேறு ஒரு தொடர் மூலம் சந்திக்கிறேன் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

ரோஜா சீரியல் போர் :

இப்படி ஒரு நிலையில் இவர் பாரதி கண்ணம்மா தொடரின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள சிபு, ரோஜா தொடர் குறித்து மட்டம் தட்டி பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ‘5 வருஷம் ஒரே கதாபாத்திரம் நடிச்சது bore அடிச்சிடுச்சி. 2,3 வருஷம்னா பரவாயில்ல. 5 வருஷம் அதே கிட்னாப், அதே fightனா போர் அடிக்காதா ?

விமர்சிக்கும் ரசிகர்கள் :

அதனால் எனக்கே கடவுளே இந்த சீரியல் எப்ப முடியும்னுன்ற அளவு ஆகிடிச்சி. அதனால் தான் 2 முறை இந்த சீரியல்ல விட்டு போக போறான்னு கூட அறிவிச்சேன். இருந்தும் பாதில விட்டு போக கூடாதுனு முடிவு பண்ணி அட்ஜஸ்ட் பண்னேன். நான் படத்துல நடிக்கறதா இருந்துச்சி. ஆனால், பிரவீன் சார் பாத்து impress ஆகிட்டேன். அவர் ஒரு சிறந்த டைரக்டர்’ என்று கூறியுள்ளார். சிபுவின் பேச்சை கேட்ட ரசிகர்கள் பலரும் புதிய வாய்ப்பு கிடைத்ததும் பழைய சீரியலை எப்படி மறப்பீர்கள். சிபு என்று ஒருவர் இருக்கிறார் என்று மக்களுக்கு தெரிந்ததே ரோஜா சீரியல் மூலம் தான் என்பதை மறந்துவிடாதீர்கள் என்று சிபுவை விமர்சித்து வருகின்றனர் .

Advertisement