தன் Live Performance-ஐ கேலி செய்தவர்களுக்கு முதன் முறையாக பதிலடி கொடுத்து பின் பதிவை நீக்கிய சித். என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
438
sidsriram
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகராக திகழ்ந்துவருபவர் பாடகர் சித் ஸ்ரீராம். சென்னையில் பிறந்த இவர், 1991ஆம் ஆண்டு குடும்பத்துடன் கலிபோர்னியாவின் பே ஏரியாவில் குடியேறினார். தன்னுடைய 3ஆவது வயதில் தாயிடம் கர்நாடக இசையை சிறுது சிறிதாக கற்க ஆரம்பித்து, பின்பு 2001ஆம் ஆண்டு தன்னுடைய 11 வயதில் முழு முயற்சியுடன் கர்நாடக இசை கற்க துவங்கினார். 2010 ஆண்டு சொந்தமாக இசை எழுதி இயக்கி அதை youtube மூலமாக வெளியிட்டு வந்தார். கல்லூரிக்கு பிறகு சென்னைக்கு வருவதையும் மார்கழி மாத உற்சவத்தில் பங்கேற்பதையும் வழக்கமாக்கி கொண்டார்.

-விளம்பரம்-

இவருக்கும் சினிமாவில் பாடும் வாய்ப்பு கொடுத்தது இசைப்புயல் தான். மணிரத்னம் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக அறிமுகமான ‘அடியே அடியே பாடல் தான்’ இவரது முதல் பாடல். அந்த பாடலுக்கு பின் இவர் எண்ணெற்ற பாடல்களை பாடி இருக்கிறார் அது அனைத்துமே படு ஹிட் தான். தமிழ் மட்டுமல்லாது தெலுகு, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் பாடி வருகிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : ரஜினி முதல் அஜித் மேனேஜர் வரை – மோடியின் கோரிக்கையை ட்விட்டரில் நிறைவேற்றிய பிரபலங்கள்.

இவர் தமிழில் பாடிய பல பாடல்கள் பலரின் Playlistஆக இருந்து வருகிறது. சினிமாவில் பாடுவதுமட்டுமல்லாமல் அது மட்டுமல்லாமல் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார் சித். அதுவும் இவர் மேடையில் பாடும் போது மட்டும் தனக்கே உரிய ஸ்டைலில் பாடலை கொஞ்சம் அனுபவித்து படுவது அடிக்கடி Trollகளுக்கு உள்ளாகிவிடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் இவர் மேடையில் பாடிய தள்ளிப்போகாதே பாடலும் Trollகளுக்கு உள்ளாகி இருக்கிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் சித் ஸ்ரீராம் நிகழ்ச்சி ஒன்றில் பாடி இருந்தார். அப்போது அச்சம் என்பது மடமையாடா படத்தில் தான் பாடிய ‘தள்ளிப் போகாதே’ பாடலை பாடி இருந்தார். இந்த பாடலை பாடும் போது  உற்சாகமாகி மேடையில் அங்குமிங்கும் துள்ளிக்குதித்தார். தற்போது அந்த வீடியோ தான் Trollகளுக்கு உள்ளாகி இருக்கிறது. அதுவும் சித், மேடையில் அந்த பாடலை பாட மத வழிபாட்டு நிகழ்ச்சியில், அந்த பாடலை கேட்டு கூட்டமாக பலர் துள்ளிக் குதிக்கும் வீடியோவை சொருகி எடிட் செய்து இருக்கின்றனர்.

வெங்கட் பிரபு போட்ட கமண்ட் :

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக வைரலாக பரவி வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த வீடியோ கண்டு இயக்குனர் வெங்கட் பிரபு “OMG,என்ன தரமான எடிட்டிங்” என பாராட்டி ஸ்மைலி எமோஜிகளை பதிவிட்டு இருக்கிறார். ஏற்கனவே சித் ஸ்ரீராம் பாடிய கர்ணன் பாட்டு இனைய வாசிகளால் படும் கேலிக்கு உள்ளாகி இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு இசை விழாவில் ‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்ற ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலை தன்னுடைய ஸ்டைலில் பாடி இருந்தார்.

ஏற்கனவே கர்ணன் பாடலை கண்டம் செய்த சித் :

‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ இன்றளவும் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த பாடல் என்று தான் சொல்ல வேண்டும். இந்த பாடலை பழம் பெரும் பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் தனது அற்புதமான குரலில் பாடி இருப்பார். அதை வித்யாசமாக பாடுகிறேன் என்று சித் பாடிய அந்த பாடலை பார்த்த நெட்டிசன்கள் சித் ஸ்ரீராமை கண்ட மேனிக்கு கேலி செய்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பதிலடி கொடுத்து பின் பதிவை நீக்கிய சித் :

இப்படி ஒரு நிலையில் தன்னுடைய Live Performance-ஐ கேலி செய்தவர்களுக்கு முதல் முறையாக சித் ஸ்ரீராம் பதிலடி கொடுத்துள்ளார். அதில் ‘நானும் என் குழுவினரும் ரசிகர்களுக்காகவே செயல்படுகிறோம், நீங்கள் அனைவரும் குடும்பம் போன்றவர்கள். காசு கொடுத்து, டிராஃபிக்கில் அமர்ந்து, மழையில் நிற்கும், அன்பில் பங்குகொள்ள வரும் மக்களுக்காக இதைச் செய்கிறோம். இணையத்திற்காக வாழும் மக்களுக்காக நாங்கள் அதைச் செய்ய மாட்டோம்’ என்று பதிவிட்டு இருந்தார். ஆனால், இந்த பதிவை சில மணி நேரத்தில் நீக்கிவிட்டார் சித்.

Advertisement