2ஜி வழக்கு! ஆ.ராசா, கனிமொழி பற்றி சித்தார்த் சர்ச்சையான ட்வீட் ! ரொம்ப தைரியம்தான்

0
4748
siddharth

கடந்த காங்கிரஸ் ஆட்சியில், ₹ 1,75,000,0000000 கோடி ஊழல் செய்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோரின் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், இந்த வழக்கில் சம்மந்தம் இருப்பதாக கலைஞர் கருணாநிதியின் மனைவியை தயாளு அம்மாள் மீதும் விசாரணை இருந்தது.
2gஇதை வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகி, போதிய ஆதாரம் இல்லாததால் அனைவரையும் விடுவிக்கிறோம் என சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இன்று இந்த வழக்கின் தீர்ப்பு என நடிகர் சித்தார்த்த காலை 8.59 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்திருந்தார்.

அதில், ராசா மற்றும் கனிமொழி நடித்துள்ள படம் திருட்டுபயலே -1 படத்தின் முடிவு இன்று வெளியாகிறது. இந்த முடிவு, ஜெயலிதா மற்றம் சசி குழுவினர் நடித்திருந்த திருட்டு பயலே – 2 வின் முடிவைப் போலவே (ஜெயிலுக்கு போவார்கள்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
siddarth-tweetஎன செம்ம கிண்டலாக நேரடியாக தாக்கி ஜாலியாக ட்வீட் செய்திருந்தார் சித்தார்த். ஆனால், தீர்ப்பு திமுகவிற்கு சாதகமாக வந்தவுடன் அந்த ட்வீட்டினை நீக்கிவிட்டார் சித்தார்த்.