திருமணத்திற்கு பின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ரேயா – சர்ப்ரைஸாக காரை பரிசளித்த சித்து (விலை எவ்ளோ தெரியுமா ?)

0
606
shreya
- Advertisement -

சமீபகாலமாகவே சின்னத்திரை சீரியல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரையில் மிகப் பிரபலமான ஜோடிகளாக திகழ்பவர்கள் சித்து-ஸ்ரேயா. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த திருமணம் என்ற சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த தொடர் மூலம் கதாநாயகனாக சின்னத்திரையில் அறிமுகமானவர் சித்து. அதே தொடரில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரேயா.மேலும், இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள்.

-விளம்பரம்-

ஒரே சீரியல் படு பேமஸ் :

ஆரம்பத்தில் இவர்களுடைய காதல் குறித்து சோசியல் மீடியாவில் பல கேள்விகளும், கருத்துக்களும் எழுந்து இருந்தது. ஆனால், இவர்கள் இருவரும் அதற்கு மௌனம் சாதித்து இருந்தனர். பின் திருமணம் சீரியல் மூலம் இவர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதால் இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் கிளம்பியது. அதோடு சோசியல் மீடியாவில் இவர்களுடைய ஜோடி புகைப்படங்கள் தான் அதிகமாக வைரல் ஆகி இருந்தது.

- Advertisement -

ராஜா ராணியில் சித்து :

அதற்கு பிறகு தான் இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படையாக ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார்கள். தற்போது சித்து அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி டிஆர்பியில் முன்னிலை வகிக்கும் தொடரான ராஜா ராணி 2 சீரியலில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் கதாநாயகியாக ஆலியா மானசா நடித்து வருகிறார்.

ஸ்ரேயாவின் புதிய சீரியல் :

தற்போது இந்த சீரியலில் சமையல் போட்டியில் சரவணன் ஜெயிப்பாரா? இல்லையா? என்ற பல விறுவிறுப்புடன் சென்று கொண்டிருந்தது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அதேபோல விஜய் டிவியில் ஒளிபரப்பான அன்புடன் குஷி என்ற தொடரில் ஸ்ரேயா நடித்து இருந்தார். அதற்குப் பிறகு அந்த சீரியலும் முடிவடைந்தது. தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி என்ற தொடரில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

சித்து – ஸ்ரேயா திருமணம் :

இந்த நிலையில் சமீபத்தில் இவர்களின் திருமணம் கோலாகலமாக நடந்தது. அதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இதை பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். மேலும், இவர்கள் இருவரும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்கள். தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார்கள்.

சித்து கொடுத்த பரிசு :

அந்த வகையில் இவர்கள் யூடியூபில் ஒரு சேனலை ஓபன் செய்து இருக்கிறார்கள். இந்நிலையில் அதில் ஸ்ரேயா பிறந்தநாள் கொண்டாட்டம் என்று வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் தன்னுடைய ஆசை பொண்டாட்டி பிறந்தநாளுக்கு சித்து Mg கார் பரிசளித்துள்ளார். இதன் விலை 10 முதல் 15 லட்சம் வரை இருக்கும். தற்போது இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும், சித்துவிற்கு பாராட்டுக்களையும் தெரிவித்து இருக்கிறார்கள்.

Advertisement