கரென்ட் கூட இல்லாத அறையில் பெஞ்சில் கிடந்துள்ள சில்க் ஸ்மிதாவின் உடல் – ஹேமா மாலினி உருக்கம்.

0
537
silk
- Advertisement -

சில்க் ஸ்மிதாவின் தற்கொலைக்கு இது தான் காரணமாக இருக்கும் என்று சில்க் ஸ்மிதாவுக்கு குரல் கொடுத்த நடிகை ஹேமமாலினி பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் புகழின் உச்சத்தில் இருந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. காந்த கண்ணழகு, வசீகரமான மயக்கும் குரல், தனக்கென ஒரு ஸ்டைல் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகை சில்க். இவர் வண்டி சக்கரம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். பின் இவர் ரஜினி, கமல், பிரபு போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார். மேலும், இந்த உலகை விட்டு சில்க் ஸ்மிதா மறைந்தாலும் இன்றும் ரசிகர்கள் மனதில் மறக்க முடியாத நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், திரைப்படங்களில் இவருடைய கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்தவர் ஹேமமாலினி. ஆனால், சுமிதா உடைய சொந்த குரலை கேட்டால் யாரும் டப்பிங் கொடுத்தது என்று நம்பமாட்டார்கள். அந்த அளவிற்கு இவரின் குரலும், ஹேமமாலினி குரலும் ஒரே மாதிரியாக இருக்கும். இந்நிலையில் மூத்த டப்பிங் கலைஞரும், நடிகையுமான ஹேமமாலினி சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் சில்க் ஸ்மிதா குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பது, சுமிதா ஒரு நல்ல மனசு உள்ள பெண். சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் ரொம்ப எமோசனல் ஆகிடுவாங்க.

இதையும் பாருங்க : தன் முதல் இந்தி படத்திலேயே பிகினி உடையில் நடித்துள்ள SS மியூசிக் லேகா – இதோ வீடியோ.

- Advertisement -

நெருங்கிய பழக்கம் இல்லை என்றாலும் நேரில் சந்திக்கும் போது மனசு விட்டு பேசுவோம். அப்படி என்னிடம் அவருடைய பர்சனல் விஷயங்களை ஷேர் செய்து இருக்கிறார். அவளுக்கு நடிகை சாவித்திரி ரொம்ப பிடிக்கும். அவங்களை மாதிரி நடிப்பில் சாதிக்க வேண்டும் என ஆசைப்பட்டாள். கவர்ச்சியாக நடிப்பது என்பது அவளோட ஆசை இல்லை. என்கிட்ட கூட அடிக்கடி சாவத்திரி மாதிரி நடிக்கணும் என்று சொல்வார். மேலும், அவர் வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசைப்பட்டார். ஆனால், சினிமா உலகம் அவளை ஒரு கவர்ச்சி பொருளாக தான் பார்த்தது.

இப்போது வரைக்கும் அவளை கவர்ச்சியாக பார்க்கிறது. அவள் உயிருடன் இருந்திருந்தால் கண்டிப்பா அவளோட வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாள். சின்ன சின்ன விஷயத்துக்கும் எமோஷனல் ஆகிற குணம் தான் அவள் தற்கொலைக்கு காரணமாக அமைந்தது என்று நினைக்கிறேன். ஏன்னா, அவர் சட்டென்று எந்த ஒரு முடிவையும் எடுப்பார். அதுதான் அவருடைய இந்த தற்கொலைக்கு காரணம். அதனால்தான் இது நிச்சயம் தற்கொலை ஆகத்தான் இருக்கும் என்று உறுதியாகச் சொல்கிறேன்.

-விளம்பரம்-

மேலும், என் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனையில் வேலை பார்க்கிறவர்கள். அவர்கள் சுமிதா இருந்த அன்னைக்கு அவளோடு உடலை மருத்துவ மனையில் பெஞ்சில் படுக்க வைத்திருந்தார்கள். அப்போது அங்கு கரண்ட் கூட இல்லையாம். அப்படி அந்த சூழலில் அவளை பார்க்க எனக்கு தோணவில்லை. அதனால் அவளை நான் பார்க்கப் போகவில்லை என்று கண்ணீருடன் கூறியிருந்தார்.

Advertisement