தற்கொலை செய்து கொண்ட பிரபல காமெடி நடிகை ஷோபனா.. தற்கொலைக்கு காரணம் இது தானாம்..

0
23819
shobana

தமிழ் சினிமா திரை உலகில் காமெடி நாயகிகள் என்று பார்த்தால் கொஞ்சம் கம்மிதான். நடிகை கோவை சரளா தவிர காமெடி நாயகிகள் என்று பார்த்தால் குறைவான எண்ணிக்கையில் தான் உள்ளார்கள். அதுவும் நீண்ட காலம் நீடித்து இருப்பதில்லை. அந்தவகையில் ‘ஜில்லுனு ஒரு காதல்’ படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்தவர் காமெடி நடிகை ஷோபனா. மேலும், இந்த படத்தின் மூலம் நடிகை சோபனா அதிகமாக மக்களிடையே பேசப்பட்டார் என்று கூட சொல்லலாம். அதோடு இந்த படத்தின் மூலம்தான் கொஞ்சம் கொஞ்சமாக சினிமா துறையில் நடிகை ஷோபனா பிரபலமாகி வந்தார். ஆனால், நடிகை ஷோபனா 2011 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி திடீரென்று தன்னுடைய வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் வெளியானது.

Image result for sillunu oru kadhal shobana

மேலும், நடிகை சோபனா தற்கொலை குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வந்ததார்கள். நடிகை ஷோபனா அவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சினிமா துறையிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தவர். இவர் தன்னுடைய 15 வயதிலேயே சினிமா துறையில் நடிக்கத் தொடங்கினார். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். ஷோபனாவின் தாயார் ராணி. இவரும் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர். இவர்கள் சென்னையில் கோட்டூர்புரம் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி சீரியலில் தான் அதிகம் நடித்தார். பின் இந்த தொடரின் மூலம் மக்களிடையே பரவலாக பேசப்பட்டார்.மேலும்,நடிகை சோபனாவுக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தது என்றும் கூறினார்கள்.

இதையும் பாருங்க : சினேகாவிற்கு ஏற்பட்ட பிரசவ வலி, இரண்டாவது குழந்தை.. கண்ணீருடன் கூறிய பிரசன்னா..

- Advertisement -

பின்னர் இவர் சினிமா துறையில் இருந்து ஒருவரை காதலித்து வந்தார். மேலும், இவர் காதல் தோல்வியில் முடிந்தது என்றும் கூறப்படுகிறது. அதன் பின்னர் சோபனா திருமணம் செய்ய விருப்பமில்லை என்று கூறி மறுத்துவிட்டார். மேலும், ஷோபனாவிற்கு உடலில் மஞ்சள் காமாலை, ஆஸ்துமா போன்ற நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் சோபான வீட்டில் இருக்கும்போது சோபனாவின் தாய் வங்கிக்கு சென்று விட்டார். வங்கிப் பணியை முடித்துவிட்டு மதியம் வீடு திரும்பும்போது சோபனா வீட்டில் தூக்கி போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Image result for sillunu oru kadhal shobana
Image result for sillunu oru kadhal shobana

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்கள். மேலும், அந்த இடத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.அதோடு சோபனாவின் உடலை போலீசார் கைப்பற்றி, தற்கொலைக்கான காரணத்தை விசாரணை நடத்தி வந்தார்கள். மேலும், இவர் காதல் தோல்வியில் முடிந்ததாலும், அவருடைய உடலில் சில பிரச்சனைகள் இருப்பதாலும் மன உளைச்சல் அதிகம் ஏற்பட்டதால் இப்படி செய்து கொண்டார் என்றும் கூறினார்கள். இது குறித்து அவருடைய தாயார் கூறியது, அவர் காதலித்து உண்மைதான். அவர் காதல் தோல்வியில் முடிந்தது உண்மைதான். மேலும், இவருக்கு சிக்கன்குனியா காய்ச்சல் ஏற்பட்டு இருந்தது.ஆகவே மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் என் மகள் ரொம்ப துன்புற்று இருந்தால். இதனால்தான் இப்படி ஒரு தவறான முடிவை எடுத்துள்ளார் என்று கண்ணீருடன் கூறினார்.

-விளம்பரம்-
Advertisement