இங்க நிக்க கூடாது போன்னு சொல்லிட்டாங்க, ரோட்டில் பிச்சைக்காரன் மாறி 3 மணி நேரமாக சுத்திட்டு இருந்தேன் – கொட்டி தீர்த்த சில்மிஷம் சிவா.

0
1472
silmishasiva
- Advertisement -

அஜித்தின் வலிமை படத்தில் நடிக்கப் போன எனக்கு இது தான் நடந்தது என்று விஜய் டிவி சில்மிஷம் சிவா கூறியிருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வெளிவந்த வலிமை படம் கோடிகளில் வசூலை குவித்து வருகிறது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். படம் முழுவதும் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது.

-விளம்பரம்-

வலிமை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இந்த படத்தில் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியும் நடித்து இருந்தார். அந்த வகையில் இந்த படத்தில் விஜய் டிவி சில்மிஷம் சிவாவும் நடித்து இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சீசன் 9 போட்டியாளராக கலந்து கொண்டவர் சில்மிஷம் சிவா. இவர் இதற்குப் பிறகு பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்று இருந்தார்.

- Advertisement -

வலிமை பட வாய்ப்பு :

இந்த நிலையில் அஜித்தின் வலிமை படத்தில் சில்மிஷம் சிவா நடித்துள்ளார். அஜித்துடன் ஆரம்பத்திலேயே இவரை பார்க்கலாம். இவர் வரும் காட்சிகளில் தியேட்டர்களில் கைதட்டல்கள் ஒலித்தது. அதுமட்டுமில்லாமல் இவரின் பாடி லாங்குவேஜில் பலரையும் சிரிக்க வைத்திருக்கிறார். படத்தில் இவருடைய சொந்த ஊரான சில்மிஷம் சிவா என்ற பெயருடன் இவர் திரையில் தோன்றியிருக்கிறார். இந்நிலையில் இது குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருந்த சில்மிஷம் சிவா கூறியிருப்பது,

படக்குழு தான் டிக்கெட் போட்டு எனக்கு அனுப்பி இருந்தார்கள்

கலக்கப்போவது யாரு 9 பைனல்ஸ் முடிவதற்கு முன்பே எனக்கு அஜித் சார் உடைய படத்தில் வாய்ப்பு கிடைத்து விட்டது. ஆனால், அப்ப எனக்கு அஜித் சார் படம்ன்னு தெரியாது. வினோத் சார் படம் மட்டும் தான் தெரியும். அதனால் ஓகே சொன்னேன். என்னுடைய காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது. ஷூட்டிங் நடந்த தேதி கலக்கப்போவது யாரு 9 ஃபைனல்ஸ் நடந்த அதே தேதியில் நடந்தது. காலையில் 4 மணிக்கு ஷூட்டிங் முடித்துவிட்டு 6 மணிக்கு பிளைட் பிடித்து ஏர்போர்ட்டில் எப்படி போவது என்று எனக்கு தெரியாது. படக்குழு தான் டிக்கெட் போட்டு எனக்கு அனுப்பி இருந்தார்கள்.

-விளம்பரம்-

அஜித் செய்த செயல் :

சென்னை ஏர்போட்டில் போய் சுத்தி சுத்தி பார்த்துட்டு இருந்தேன். ஆனால், அங்கேயும் கடவுள் என்னை கைவிடல. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் எண்ணை கவனித்து எல்லா முறையும் முடித்து பிளைட் ஏற்றி விட்டார். ஹைதராபாத் போனதும் வினோத் சார் என்னை அஜித் சார்கிட்ட அறிமுகம் செய்து வைத்தார். அவ்ளோ பெரிய நடிகர் அவர் உடனே வந்து என்னைக் கை கொடுத்து ஹலோ சிவா என்று சொன்னார். அங்கேயே தல எல்லாம் சுத்தி சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனேன். பின் அன்னைக்கு சூட்டிங் முடிந்து ஹோட்டலுக்கு போனேன்.

ஆனால், எனக்கு மொழி தெரியாததால் நான் சொல்வது ஹோட்டல் நிர்வாகிகளுக்கு புரியவில்லை. இங்க நிக்க கூடாது என்று என்னை அனுப்பி வைத்துவிட்டார்கள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. கையில் போன் இல்லை, பணம் இல்லை. எல்லாமே கேரவனில் இருந்தது. ரோட்டில் பிச்சைக்காரன் மாதிரி 3 மணி நேரம் சுற்றிக் கொண்டே இருந்தேன். கடைசியில் படத்தின் மேக்கப் கலைஞர்கள் என்னை பார்த்து கவனித்து பின் மறுபடியும் ஹோட்டல் ரூமுக்கு அழைத்துப் போய் தங்க வைத்தார்கள். முதல் படத்திலேயே எனக்கு இவ்வளவு அனுபவங்கள் கிடைத்தது. அஜித் சாருடன் நடித்தது மறக்க முடியாத தருணம் என்று சில்மிஷம் சிவா வலிமை படத்தின் அனுபவத்தை பகிர்ந்து இருந்தார்.

Advertisement