லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிம்பு கடந்த சில வருடங்களாகவே உடல் எடை கூடி குண்டாக இருந்து வந்தார். இதனால் இவருக்கு படவாய்ப்புகளும் இல்லாமல் இருந்தது. ஆனால், நீண்ட இடைவெளிக்கு பின் இவருக்கு ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படம் ஒரு நல்ல கம் பேக் ஆக அமைந்தது.
ஆனால், அந்த படத்திற்கு பின்னர் வெளியான ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனத்தைப் பெற்றது. அதோடு மட்டும் இல்லாமல் இந்த படத்தில் சிம்புவின் உடல் எடை மிகவும் விமர்சிக்கப்பட்டு வந்தது. அவரது ரசிகர்களே சிம்பு உடல் எடையை குறைத்து பழைய சிம்புவாக மாற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.
இதனால் லண்டன் சென்று உடல் எடை குறைப்பதற்காக உடல் பயிற்சிகளை அங்கேயே தங்கி மேற்கொண்டு வந்தார் சிம்பு. அதன் பின்னர் உடல் எடை குறைத்து படு ஸ்லிம்மாக மாறினார். உடல் எடை குறைத்த உடனே தற்போது சம்பளத்தை ஏற்றியுள்ளார் சிம்பு.
சிம்பு மாநாடு படத்திற்கு பின்னர் கௌதம் கவுதம் கார்த்திக் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு சிம்பு 6 கோடி ருபாய் சம்பள அட்வான்ஸாக மட்டுமே பெற்றுள்ளாராம். மேலும் படத்தின் லாபத்தில் பெரிய பங்கு தரவேண்டும் என்றும் ஒப்பந்தம் போட்டுள்ளாராம் சிம்பு. பொதுவாக பெரிய நடிகர்கள் தான் படத்தில் பங்கு போடுவார்கள் தற்போது சிம்புவும் இப்படி இறங்கியுள்ளது தயரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.