லண்டனில் உடல் எடை குறைப்பு சிகிச்சை பின் சென்னை திரும்பிய சிம்பு.! எப்படி இருக்கார் பாருங்க.!

0
557

லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிம்பு கடந்த சில வருடங்களாகவே உடல் எடை கூடி குண்டாக இருந்து வந்தார். இதனால் இவருக்கு படவாய்ப்புகளும் இல்லாமல் இருந்தது. ஆனால், நீண்ட இடைவெளிக்கு பின் இவருக்கு ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படம் ஒரு நல்ல கம் பேக் ஆக அமைந்தது.

ஆனால், அந்த படத்திற்கு பின்னர் வெளியான ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனத்தைப் பெற்றது. அதோடு மட்டும் இல்லாமல் இந்த படத்தில் சிம்புவின் உடல் எடை மிகவும் விமர்சிக்கப்பட்டு வந்தது. அவரது ரசிகர்களே சிம்பு உடல் எடையை குறைத்து பழைய சிம்புவாக மாற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.

இதையும் பாருங்க : மீண்டும் உள்ளாடை இல்லாமல் போட்டோ ஷூட் நடத்திய ராதிகா ஆப்டே.! ரசிகர்கள் ஷாக்.! 

தற்போது சிம்புவும் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைக்க லண்டன் சென்றிருந்தார் சிம்பு. கடந்த சில வாரங்களாக அங்கேயே தங்கி உடல் எடை குறைப்பிற்கான ஒருவித சிகிச்சையும் மேற்கொண்டதாககூறப்பட்டது.

இந்த நிலையில் தனது தம்பி குறளரசன் திருமணத்திற்காக லண்டனில் இருந்து மீண்டும் சென்னை திரும்பியுள்ளார் சிம்பு. தற்போது சிம்புவின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் பழைய சிம்பு போல உடல் எடை குறைந்து மிகவும் பிட்டாக காணப்படுகிறார்.