ரம்யாவை தொடர்ந்து ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு ஆட்டம் போட்ட பாவனா. வைரலாகும் வீடியோ.

0
22927
bhavana
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் எத்தனையோ பெண் தொகுப்பாளர்கள் வந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வரும் பெண் தொகுப்பாளினிகள் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார்கள். டிடி துவங்கி சமீபத்தில் வந்த ஜாக்லின் வரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட விஜய் தொகுப்பாளினிகள் ஏராளம். அந்தவகையில் விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினி களில் ஒருவராக திகழ்ந்தவர் பாவனா. விஜய் டிவி யின் பிரபல தொகுப்பாளினி பாவனா ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார்.

-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்”, “ஜோடி” போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் பாவனா அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களாக வாரி வழங்கி வருகிறார். அதில் வித்யாசமான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும் வருகிறார்.

இதையும் பாருங்க : கடன் பிரச்சனையில் சிக்கிய விநியோகிஸ்தர்கள். மௌனம் காக்கும் விஜய் மாமா. பஞ்சாயத்து செய்த சசிகலா புஷ்பா.

- Advertisement -

மேலும், தொகுளுப்பாளினி என்பதை தவிர இவர் பாடவும் செய்வார். ஆனால், இவருக்கு நடனமும் வரும் என்பது சமீபத்தில் இவர் பதிவிட்ட வீடியோவில் இருந்து ரசிங்கர்கள் அறிந்து கொண்டனர். அதுவும் விஜய் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு பாரத நாட்டிய நடனம் ஆடி அசத்தியுள்ளார் பாவனா.

சமீப காலமாக எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த பாவனா சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். அதன் பிறகு அம்மணிக்கு தொகுப்பாளினி வாய்ப்பு படு ஜோராக சூடுபிடிக்க துவங்கியது. நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் கூட தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றிருந்தார்.

இதையும் பாருங்க : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் மனைவி பேட்ட படத்தில் நடித்துள்ளாரா ? வைரலாகும் புகைப்படம்.

-விளம்பரம்-

கடந்த சில காலமாக தமிழ் ரசிகர்கள் இவரை மறந்திருந்த நிலையில் சமீபத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளினியாக அசத்தி இருந்தார் பாவனா. ஏற்கனவே விஜய் டிவி தொகுப்பாளினியும் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள ரம்யா வாத்தி கம்மிங் பாடலுக்கு வெளக்கமாருடன் நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement