வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ்காக வீடியோ எடுத்தால் தண்டனை – தியேட்டர் நிர்வாகத்தால் கடுப்பான விஷால்.!

0
479
Vishal
- Advertisement -

ஹாலிவுட் படங்களில் பல படங்கள் 1 2 3 என பல பாகங்கள் வந்திருக்கிறது. அந்த வரிசையில் அவெங்ஜர்ஸ் சீரிஸ் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், அந்த படத்தின் மற்றும் ஒரு பாகம் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் என்ற படம் இன்று வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

புதிய படங்களை திரைக்கு வருவதற்கு முன்பாகவே அந்த படத்தை பைரேசி மூலம் இனயதளங்களில் வெளியிட்டு விடுகின்றனர். அதில் பல புதிய படங்களை வெளியிடும் ஒரு அமைப்புதான் தமிழ் ராக்கர்ஸ். இவர்கள் புதிய படம் வெளியான ஒரு சில நாட்களில் தங்களது வலைதளத்தில் வெளியிட்டு விடுகின்றனர்.

இதையும் படியுங்க : லண்டனில் உடல் எடை குறைப்பு சிகிச்சை பின் சென்னை திரும்பிய சிம்பு.! எப்படி இருக்கார் பாருங்க.! 

- Advertisement -

பைரஸிகளை தவிர்க்கும் விதமாக திரையரங்க உரிமையாளர்களும் கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்படத்தை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ்சாக வைக்க வீடியோ எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெற்றி திரையரங்க உரிமையாளர் ட்வீட் செய்திருந்தார்.

இந்த டீவீட்டிற்கு ரீ- ட்வீட் செய்த விஷால், வருடம் ஒரு முறை வெளியாகும் ஆங்கில படத்திற்கு பதிலாக வார வாரம் வெளியாகவும் தமிழ் படத்திற்கு இது போல கூறியிருந்தால் நான் பாராட்டி இருப்பேன் என்று கூறியுள்ளார். அதற்கு வெற்றி திரையரங்க உரிமையாளரும் கண்டிப்பாக, மொழி பேதம் இன்றி சினிமாவை நாங்கள் ஆதரிப்போம் பைரஸிக்கு எதிராக நிற்போம் என்று பதில் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement