பிக் பாஸ் வெற்றியாளரை நேரில் சந்தித்து பரிசளித்த சிம்பு.! வைரலாகும் வீடியோ.!

0
2585
Simbu

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை(அக்டோபர் 6 ) வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும்பரிட்சயமான போட்டியாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நடன இயக்குனர் சானண்டி. பிக்பாஸ் நிகழ்ச்சி முன்னர் தொலைக்காட்சியில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ள சாண்டிக்கு ஏற்கனவே ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. மேலும் இவர் திரைப்படங்களிலும் நடன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். அதேபோல சிம்புவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

🖤💥

A post shared by STR (@str.offcial) on

பிக் பாஸ் நிகழ்ச்சியின்இந்த சீசன் மிகவும் கலகலப்பாக செல்வதற்கு தாண்டி ஒரு முக்கிய பங்கினை வகித்து வந்தார்.அதனை கமல்ஹாசன் கூட பல முறை கூறியுள்ளார். அதேபோல மதுமிதா விஷயத்தை தவிர வேறு எந்த ஒரு சர்ச்சையிலும் சாண்டி சிக்கியதுமில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் இறுதிப் போட்டி வரை தகுதி பெறுவார் என்று பலரும் எதிர்பார்த்த ஒரு விஷயம் தான். ஆனால், இவர் மூன்றாவது இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இரண்டாம் இடத்தை பிடித்து தாண்டி அனைவரையும் ஷாக்கிற்குள்ளாகினர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வரை சாண்டி, கவினிடம் தான் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். சமீபத்தில் தர்ஷன் மற்றும் கவின் இருவரும் சாண்டியை அவரது வீட்டில் சந்தித்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில்வைரலாக பரவியது.

இதையும் பாருங்க : சிவகார்த்திகேயன் மற்றும் பாண்டிராஜை திட்டி தீர்த்த மீரா.! சந்தோஷத்தில் ரசிகர்கள்.! காரணம் என்ன தெரியுமா ?

- Advertisement -

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிம்பு .பிக்பாஸில் இரண்டாம் இடத்தை பிடித்த சாண்டியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அந்த வீடியோவில் சாண்டியுடன் தர்ஷனும் இருக்கிறார். மேலும் சாண்டியை சந்தித்துள்ள சிம்பு சாண்டிக்கு புத்தகம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். சிம்புவை நேரில் கண்ட சாண்டி மகிழ்ச்சியில் திகைத்து போய் உள்ளார்.

Image result for simbu sandy

சிம்புவிற்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் ஒரு இணை பிரியாத பந்தம் இருந்து கொண்டுதான் வருகிறது. கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மகத், நடிகர் சிம்புவின் மிகவும் நெருங்கிய நண்பர். பிக்பாஸில் இருந்து வெளியே வந்த மகத்தை நடிகர் சிம்பு நேரில் சென்று சந்தித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. அதேபோல பிக் பாஸ் வீட்டில் மகத்திற்கு நண்பர்களாக இருந்து வந்த யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா உடனும் நடிகர் சிம்பு நட்பு பாராட்டி வந்து கொண்டிருக்கிறார். இவர்கள் அனைவரும் இணைந்து அடிக்கடி பார்ட்டி என்று செல்வதும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும், சிம்பு, படத்தில் ஐஸ்வர்யா நடிக்க உள்ளதாகவும் ஒரு செய்தி இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

இதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனை நடிகர் சிம்புதான் தொகுத்து வழங்க இருக்கிறார் என்ற ஒரு செய்தியும் சமூகவலைதளத்தில் பரவலாக பேசப்பட்டது. ஆனால், அடுத்த சீசனிலும் கமல்தான் மீண்டும் தொகுப்பாளராக பணியாற்றப் போகிறார் என்று தொலைக்காட்சி தரப்பிலிருந்து அதன் பின்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிம்பு சாண்டியை சந்தித்து பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கும் தனக்கும் இருக்கும் உறவினை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறார் சிம்பு. விரைவில் சிம்பு இயக்க உள்ள படத்தில் சாண்டி நடன இயக்குனராக பணியாற்றினாலும் அதில் ஆச்சரியபடுவதற்கு ஒன்றுமில்லை.