மகேஷ் பாபுவுடன் நடிக்கிறாரா லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு..!வெளியான புகைப்படம்..!

0
246
Simbhu

கடந்த சில காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சிம்பு செக்க சிவந்த வானம் படத்திற்கு பின்னர் வரிசையாக படத்தில் நடித்து வருகிறார்.வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, சுந்தர் சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ போன்ற படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

simbhumahesh

- Advertisement -

தற்போது வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து வரும் சிம்பு மும்மரமாக படபிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும், இந்த படத்தை பொங்கல் பண்டிகையன்று வெளியிட வேண்டும் என்று மும்மரமாக இருக்கிறார் சிம்பு.

இந்த நிலையில் நடிகர் சிம்பு மற்றும் தெலுகு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சில சமூக வளைத்தளத்தில் படு வைரலாக பரவி வந்ததால், சிம்புவும், மகேஷ் பாபும் புதிய படத்தில் நடிக்க உள்ளனர் என்று கிசுகிசுக்கப்பட்டது.

Simbhumaheshbabu

ஆனால், உண்மையில் நடிகர் சிம்பு தற்போது ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தின் படப்பிடிப்பிற்காக ஆந்திராவில் உள்ள ராஜ மௌலி பிலிம் சிட்டிக்கு சென்றுள்ளார். அங்கே மகேஷ் பாபு நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. அப்போது இருவரும் எதிர்பாராதவிதமாக சந்தித்த போது எடுக்கபட்ட புகைப்படம் என்று தற்போது தெரியவந்துள்ளது.