மாநாடு, சுந்தர் சி படத்தை தொடர்ந்து சிம்பு இணையவிருக்கும் அடுத்த சூப்பர் ஜோடி .! அதிகாரபூர்வ தகவல் இதோ ..!

0
439

கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த சிம்பு தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அதுவும் “செக்க சிவந்த வானம் ” படத்திற்கு பிறகு சிம்புவின் மார்க்கெட் எகிறியுள்ளது.

Simbhu

- Advertisement -

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “மாநாடு” படத்தில் நடித்து வரும் சிம்பு அதை தொடர்ந்து சுந்தர் சி இயக்கி வரும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படங்களை தொடர்ந்து கௌதம் வாசுதேவ் இயக்கம் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார் சிம்பு.

சமீபத்தில் நடிகர் சிம்பு, இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் ஏ ஆர் ரகுமானுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வளைத்தளத்தில் வைரலாக பிறவி வந்தது. இதனால் சிம்புவின் அடுத்த படத்தை இயக்குனர் கௌதம் மேனன் தான் இயக்கியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்நிலையில் சிம்புவின் அடுத்த படத்தை கௌதம் மேனன் தான் இயக்கஉள்ளார் என்ற நம்பகரமான தகவலும் வெளியாகியுள்ளது. அந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement