தனது படத்தில் நடித்த நடிகையிடமே பரதநாட்டியம் கற்று வரும் சிம்பு. யாரிடம் தெரியுமா ?

0
36103
Str
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் சர்ச்சை நாயகன் என்றால் அது ‘லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு’ தான். . இருப்பினும் சினிமாத்துறையில் அவரை குறித்து பல விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தன. எப்படியிருந்தாலும் சிம்புவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டுதான் வருகிறது.நடுவில் சில தோல்வி படங்கள் வந்த நிலையிலும் ரசிகர்கள் அவரை கை கொடுத்து தூக்கி விட்டனர்.செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினர். இந்த படங்களை தொடர்ந்து சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைப்பததற்கு வெளிநாடு சென்று தீவிர கவனம் செலுத்தி வந்த சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்துவருகிறார்.

-விளம்பரம்-
Image may contain: one or more people

இந்த படத்திற்காக நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்து வந்தார். அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து சிம்புவின் சில புகைப்படங்கள் கூட வெளியாகி இருந்தது. இது ஒருபுறம் இருக்க நடிகர் சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் சிம்புவின் உடல் எடை குறைந்த புகைப்படத்தை பார்த்து பலரும் வியந்து போனார்கள். சிம்புவின் உடல் எடை குறைப்பு குறித்து பேசிய அவரது ஜிம் பயிற்சியாளர், சிம்புவுக்கு பயிற்சி கொடுத்தது சற்று வித்தியாசமான அனுபவம். மற்றவர்கள் போல ஒரே பயிற்சியை அவர் திரும்ப திரும்ப செய்ய விரும்பவில்லை. அதனால் அவருக்கு நான் விதவிதமான பயிற்சிகளை கொடுத்தேன்.

- Advertisement -

காலை 4.30 மணிக்கெல்லாம் எழுந்து நடைபயிற்சி செய்வார். பின்னர் ஜிம்மில் வொர்க்கவுட். இவை தவிர்த்து அவரின் உடல்வலிமை அதிகரிக்க பிரேத்யக பயிற்சியும் கொடுக்கப்பட்டது. வாரத்தில் 4 நாட்கள் பயிற்சியில் ஈடுபட்ட சிம்பு தற்போது 5 நாட்கள் பயிற்சி செய்கிறார். இவைத் தவிர்த்து அவர் விளையாடுவதிலும் கவனம் செலுத்தினார்.ஊரடங்கால் அவரின் எடை அதிகரித்து விட்டது. அதன் பின்னர் ஜீன் மாதம் மீண்டும் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தார். கடினமாக பயிற்சி செய்து தற்போது 71.1 கிலோ எடை கொண்ட சிம்புவாக மாறி நிற்கிறார் என்று கூறியிருந்தார்.

இந்த உடல் எடை குறைக்கும் பயணத்தில் உடற்பயிற்சிகளை மட்டும் செய்யாமல் பல்வேறு விளையாட்டுகளிலும் நீச்சலும் ஈடுபட்டிருக்கிறார் சிம்பு. இப்படி ஒரு நிலையில் நடிகர் சிம்பு பரத நாட்டியம் கற்றுக்கொள்ள திட்டமிட்டிருக்கிறார். இதனால் பிரபல நடிகை சரண்யா மோகன் நடத்திவரும் பரதநாட்டிய பள்ளியில் சேர்ந்து இருக்கிறாராம் சிம்பு. நடிகையான சரண்யா மோகன் தமிழில் யாரடி நீ மோகினி, ஈரம், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் ஜித்தன் ரமேஷ் ஜோடியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு சரண்யா மோகன் இடம் பரதநாட்டியம் கற்றுக் கொள்ளும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement