மீண்டும் அஜித் ரசிகர் என்று நிரூபித்த சிம்பு.! யார் பண்ணுவா இப்படியெல்லாம்.!

0
446
Simbhu-Ajith

நடிகர் சிம்பு எந்த அளவிற்க்கு அஜித்தின் தீவிர ரசிகர் என்பதை பல முறை நிரூபித்துள்ளார். அவரது பல படங்களில் கூட அஜித் ரெபரென்ஸ் இருந்துள்ளது. இந்நிலையில் தனது படங்களுக்கு பாலபீஷேகமோ, அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கவோ வேண்டாம் என்று சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த விடியோவை சிம்புவின் நண்பரும் நடிகருமான மஹத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சிம்பு இப்படி பேசியதற்கு முக்கிய காரணமே அவர் தீவிர அஜித் ரசிகர் என்பதால். ஏன்னெனில் இதை போன்ற விடயத்தை அஜித் பல ஆண்டு முன்னரே சொல்லிவிட்டார்.

அப்படி இருந்து சமீபத்தில் விஸ்வாசம் படம் வெளியான போது பேனர்கள் மீது ஏறி பாலபிஷேகம் செய்த ரசிகர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். தற்போது அதனையும் மனதில் வைத்துத்தான் சிம்பு இப்படி பேசியுள்ளார் என்றும் எண்ணம் தோன்றுகிறது.