அது போன்ற உணவை சாப்பிட்டு தான் 27 கிலோ வரை உடல் எடையை குறைத்தேன்- மனம் திறந்த நடிகர் சிம்பு

0
438
Str
- Advertisement -

இதை சாப்பிட்டதனால் தான் என்னால் இந்த அளவிற்கு உடல் எடையை குறைக்க முடிந்தது என்று சிம்பு அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் சர்ச்சை நாயகன் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது சிம்பு தான். அந்த அளவிற்கு அவரை குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் வலம் வரும். இவர் இயக்குனர், நடிகர் டி ராஜேந்திரன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அவர்கள் மாநாடு என்ற படத்தில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் எடுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. மேலும், ரொம்ப காலமாகவே ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருந்த மாநாடு படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குக்கு வர இருக்கிறது. அதோடு இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. மாநாடு படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வர இருக்கிறது.

இதையும் பாருங்க :அவருக்கு ஏதாவதுஆச்சு, பாம்ப எடுத்துட்டு போய்’ – சூர்யாவிற்கு ஆதரவாக ரோட்டில் இறங்கிய பழங்குடி மக்கள்.

- Advertisement -

இந்நிலையில் மாநாடு படத்தில் சிம்புவின் கம்ப்ளீட் transformation குறித்து பலரும் சோசியல் மீடியாவில் கேள்வி கேட்டு வருகின்றனர். சில ஆண்டுகளாக இவருடைய படங்கள் மக்கள் மத்தியில் பெரியளவில் வெற்றி அடையவில்லை என்று படங்களில் நடிப்பதில் இருந்து சிம்பு விலகி இருந்தார். பின் சமீப காலமாகவே இவர் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அப்போது இவரின் உடல் தோற்றம் பயங்கரமாக மாறி இருந்தது. மேலும், இவர் உடல் எடை கொஞ்சம் வெயிட் போட்டு இருந்தது குறித்து பலரும் விமர்சித்து இருந்தார்கள். ஆனால், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படத்தில் சிக்கென்று உடல் எடையை குறைத்து பழைய ஸ்டைல் சிம்புவாக மாறி இருந்தார்.

இவருடைய படத்தைப் பற்றி ஒரு பக்கம் பேசிக்கொண்டு இருந்தாலும் சிம்பு இந்த அளவிற்கு உடல் எடையை குறைத்து இருக்கிறாரா? என்று ரசிகர்களும் பிரபலங்களும் சோசியல் மீடியாவில் கேட்டிருந்தார்கள். இந்நிலையில் சிம்பு தன்னுடைய இந்த ட்ரான்ஸ்பர்மேஷனுக்கு காரணம் என்ன என்பதை பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறியது,

-விளம்பரம்-

மாநாடு படத்திற்காக நான் 27 கிலோ உடல் எடையைக் குறைத்து இருக்கிறேன். உடல் எடையை குறைப்பதற்காக இரண்டு மாதங்கள் முழுவதும் நீர் ஆகாரம் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டேன். solid உணவு வகைகளை உட்கொள்ளவில்லை. இதனால் எனக்கு பல சிரமங்கள் வந்தது. அதை எல்லாம் தாண்டி தான் நான் வந்தேன். அதோடு பல கஷ்டங்களை தாண்டி தான் நான் இந்த இடத்தில் இப்படி ஒரு தோற்றத்தில் இருக்கிறேன் என்று சிம்பு கூறி இருக்கிறார். இவருடைய கம்ப்ளீட் ட்ரான்ஸ்பர்மேஷன் குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement