சூர்யாவிற்கு ஆதரவாக பாம்புகள், எலிகளுடன் பழங்குடியின மக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜெய் பீம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் ஒரு சில சமூகத்தினர் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து வன்னியர் சமூகத்தினர் சூர்யாவை எதிராக கோசம் செய்தும், கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள். இருந்தாலும் பலரும் சூர்யாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் முன்பு தமிழ்நாடு பழங்குடியினர் நாடோடிகள் கூட்டமைப்பு சார்பில் 50 க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் ஜெய்பீம் படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து இருக்கிறார்கள். ஜெய்பீம் படத்தில் பழங்குடி மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளையும், துயரங்களையும் சிறப்பாக காட்டி நடித்ததற்கு நடிகர் சூர்யாவிற்கும், திரைப்படத்திற்கும் நாங்கள் ஆதரவு அளிப்போம் என்று பழங்குடியினர் ஒன்று திரண்டு இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள பழங்குடி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முக ஸ்டாலின் வழங்கி இருக்கிறார்.
இதையும் பாருங்க : புதுமண தம்பதி மதன் ரேஷ்மாவிற்கு சிம்பு கொடுத்த இன்ப அதிர்ச்சி. வைரலாகும் வீடியோ இதோ.
இந்நிலையில் பழங்குடியின மக்கள் மு.க. ஸ்டாலின், நீதியரசர் சந்துரு, சூர்யா ஆகியோருக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்து அமைதியான முறையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் இவர்கள் சாரை பாம்பு, நல்ல பாம்பு, எலிகள், பூம்பூம் மாடு உள்ளிட்டவைகளை கொண்டு வந்து நடிகர் சூர்யா வாழ்க, முதல்வர் முக ஸ்டாலின் வாழ்க என முழக்கங்களை எழுப்பி இருக்கிறார்கள். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும், இதுகுறித்து பழங்குடியின மக்கள் சார்பில் மகேஸ்வரி பேசியது, ஜெய்பீம் படத்தில் எங்களுடைய சமுதாயம் சந்திக்கும் பிரச்சனைகளையும் கஷ்டங்களையும் அப்படியே காட்டி இருக்கிறார்கள்.
ஆனால், அதற்கு சூர்யாவுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சூர்யாவுக்கு எதிராக எந்த அசம்பாவிதங்கள் நடக்கும் பட்சத்தில் அவர்கள் மீது பாம்பை கொண்டு எறிவோம். பழங்குடி மற்றும் நாடோடிகள் மக்கள் தமிழக அரசுக்கும், நடிகர் சூர்யாவுக்கும் நன்றி கடன் பட்டிருக்கிறோம். எந்த சூழ்நிலையிலும் சூர்யாவிற்கு நாங்கள் எப்போதும் ஆதரவாக இருப்போம் என்று மனு ஒன்றை ஆட்சியரை சந்தித்து கொடுத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.