மீண்டும் கைகூடிய மாநாடு. 27 ஆண்டுகள் கழித்து சபரி மலைக்கு மாலை போட்ட சிம்பு. வைரலாகும் புகைப்படம்.

0
11320
simbu
- Advertisement -

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த சிம்பு ஒரு காலத்தில் பிஸியான ஒரு நடிகராக இருந்து வந்தார். ஆனால், இடையில் இவரது படங்கள் தொடர்ந்து தோல்வி கண்டது. அதற்கு முக்கிய காரணமே சிம்பு சரியாக ஷூட்டிங் வருவதில்லை என்று தயாரிப்பாளர்கள் சொன்ன குற்ற சாட்டுகள் தான். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற திரைப்படம் படு தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு ‘மாநாடு’ படத்தில் கமிட் ஆனார்.

-விளம்பரம்-

இதனால் சிம்புவிற்கு இந்த படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். மேலும், மாநாடு படத்தை தொடர்ந்து கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்த ‘மப்டி’ என்ற படத்தின் ரீமேக்கிலும் சிம்பு கமிட் ஆனார். இதனால் இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், வழக்கம் போல இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பிற்க்கு வராமல் உற்சுற்றிக்கொண்டு டிமிக்கி கொடுத்துகொண்டே வந்தார் சிம்பு. இதனால் இந்த இரண்டு படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டார். இதனால் சிம்புவின் ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.

இதையும் பாருங்க : இரவு பார்ட்டி, மோசமான ஆடை, ஆண் நண்பருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.

- Advertisement -

” மாநாடு” படம் கைவிடப்பட்டது என்று அறிவித்த நிலையில் இந்த படத்திற்கு கூடிய விரைவில் நடிகரை தேர்ந்தெடுத்து படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார் தயாரிப்பாளர். இதனைத் தொடர்ந்து சிம்பு ” மகா மாநாடு” என்ற படத்தை தந்தை டி. ராஜேந்திரன் அவர்கள் இயக்க எடுக்கப் போகிறோம் என்று அதிரடி அறிவிப்புகளை தெரிவித்திருந்தார். ஆனால், அதை பற்றிய அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் சிம்புவின் அம்மா உஷா, மாநாடு தயாரிப்பாளரை சந்தித்து சமாதானம் செய்து ‘மாநாடு’ படத்திற்கு சிம்பு ஒழுங்காக படப்பிடிப்பிற்கு வருவார் என்று உறுதியளித்தார்.

இதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாநாடு படம் மீண்டும் துவங்கப்படும் என்று அறிவிப்புகள் வெளியானது. மேலும், இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது என்று கூறியிருந்த நிலையில் தற்போது சிம்பு அவர்கள் ஐய்யப்பன் கோவிலுக்கு மாலை போட உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் நேற்று சிம்பு, சபரி மலைக்கு சென்று மாலை போட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
View this post on Instagram

#Simbu In Sabarimalai

A post shared by Behind Talkies (@behindtalkies) on

அவருடன் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் இருக்கிறார். இதனால் விரைவில் மாநாடு படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சிம்பு 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு விரதமிருந்து செல்ல உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. சிம்புவின் இந்த திடீர் முடிவு அவரது நண்பர்கள், குடும்பத்தினர், மாநாடு படக்குழு அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம். மேலும், அனைவரது மத்தியிலும் சிம்பு மாலை போடும் நிகழ்வினால் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

Advertisement