வருடத்திற்கு இத்தனை இலவச சீட், பட பிரச்சனையில் பஞ்சாயத்து, தற்போது டாக்டர் பட்டம் – சிம்புவும் வேல்ஸ் நிறுவனத்தின் டீலிங்கும்.

0
466
simbu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருக்கிறார் சிம்பு. இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. நடுவில் சில படங்கள் தோல்வி அடைந்த நிலையில் சமீபத்தில் வெளியான ‘மாநாடு ‘ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் வேல்ஸ் பல்கலை கழகம் நடிகர் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் அளித்து இருந்தது. இன்று முதல் சிம்பு ‘டாக்டர் சிம்பு’ என்று அழைக்கப்படுவார் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற வேல்ஸ் பல்கலைக்கழகம் நிறுவனர் ஐசரி கணேஷ் கூறியிருந்தார். சிம்புவிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு இருப்பது அவரின் ரசிகர்களுக்கு பெருமை அளித்து இருந்தாலும் ஒரு பக்கம் சில சர்ச்சைகளும் விவாதங்களும் எழுந்து உள்ளது.

-விளம்பரம்-
Image

சரி, முதலில் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய ஐசரி கணேசன் சிம்புவிற்கு எந்த அளவிற்கு உதவி செய்தவர் என்பதை பார்ப்போம். மாநாடு படத்தை தொடர்ந்து தற்போது சிம்பு Gvm இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கௌதம் மேனன் பிறந்தநாளில் இந்த படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்திற்கு அப்போது  ‘நதிகளிலே நீராடும் சூரியன்’  என்று தான் டைட்டில் வைத்தனர். ஆனால், இந்த டைட்டில் கொஞ்சம் ட்ரோல்களுக்கு உள்ளாகி இருந்தது.

- Advertisement -

தயாரிப்பாளர் ஐசரி கணேசன் :

இதனால் இந்த படத்தின் டைட்டிலை ‘வெந்து தணிந்த காடு’ என்று மீண்டும் வெளியிட்டனர். இந்த படத்தின் டைட்டில் மாற்றப்பட்டதற்கு முக்கிய காரணம் சிம்பு தானாம். அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பின்னர் ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2 ‘ படம் எடுக்க திட்டமிடபட்டிருந்தது. அந்த படத்தை ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால், அந்த திரைப்படத்தின் பணிகள் துவங்குவதற்குள் ஐசரி கணேஷ் தயாரிப்பில் கெளதம் மேனன் – சிம்பு – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் ஒரு படம் உருவாக திட்டமிடபட்டுவிட்டது.

நிறுத்தப்பட்ட சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வம்பு செய்த சிம்பு  | venthu thaninthathu kaadu movie - Welcome to Live Madras.com

‘நதிகளிலே நீராடும் சூரியன்’ To ‘வெந்து தணிந்த காடு’

அது தான்  ‘நதிகளிலே நீராடும் சூரியன்’. இப்படி ஒரு கெளதம் மேனனிடம் தனுஷின் ‘அசுரன்’ போல கனமான கதைக்களம் கொண்ட படம் பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறார். இதனால் ஜெயமோகனின் ‘அக்னி குஞ்சொன்று கண்டேன்’ என்ற கதையை படமாக்கும் உரிமையை வாங்கி அதற்கான பணிகளில் ஈடுபட்டார் கெளதம் மேனன். அந்த படம் தான் இந்த ‘வெந்து தணிந்த காடு’. இப்படி ஒரு நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தை திட்டமிட்டு இருந்த  ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தன்னுடைய நிறுவனத்திற்கு படம் பண்ணுவதாக பேசிவிட்டு, இப்போது இந்தக் கூட்டணி வேறொரு தயாரிப்பு நிறுவனத்திற்கு படம் பண்ணுகிறார்கள் என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

சிம்புவிற்காக சமரசம் பேசிய வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் :

இது ஒருபுறம் இருக்க ‘AAA’ படத்தின் நஷ்ட ஈட்டை சிம்பு கொடுக்கவேண்டும். அதை கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்கிறார்” என்று தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இதனால் இந்த ‘வெந்து தணிந்த காடு’ படத்திற்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. இருப்பினும் ஃபெப்ஸி அமைப்பு மற்றும் ஐசரி கணேஷ் ஆதரவால் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கயது.

சிம்புவுக்காக இலவச சீட் :

அதற்கு முக்கிய காரணம் ஃபெப்ஸி ஊழியர்களின் மகன், மகள்களுக்கு ஐசரி கணேஷ் தனது கல்லூரியில் வருடத்திற்கு 40 சீட்களை இலவசமாக வழங்கியிருக்கிறார். அதனால் தான் ஃபெப்ஸி அமைப்பு இந்த படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறதாம். தற்போது ஐசரி கணேசன் நடத்தி வரும் வேல்ஸ் பல்கலை கழகம் தான் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement