அஜித், விஜய் ரசிகர்களை வாய் பிளக்க வைத்த சிம்பு ரசிகர்கள்..! இப்படியா செய்வது. ?வைரல் வீடியோ.!

0
1191
Simbu
- Advertisement -

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் “செக்க சிவந்த வானம்” திரைப்படம் இன்று (செப்டம்பர் 27) வெளியாகியுள்ளது. அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய் போன்ற மல்டி ஸ்டார்களை கொண்டு உருவாகியுள்ள படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

-விளம்பரம்-

- Advertisement -

அதிலும் குறிப்பாக சிலம்பரசன் நடிப்பில் ஓராண்டிற்கு பிறகு வெளியாகும் படம் என்பதால், எஸ் டி ஆர் ரசிகர்கள் குதூகுலமடிந்துள்ளனர். இன்று திரையரங்குகளில் பெரும்பாலும் சிம்புவின் ரசிகர்கள் தான் காணப்பட்டனர். இந்த படத்தை அவரது ரசிகர்கள் சிம்புவின் படமாகவே பார்க்கின்றனர்.

வழக்கமாக ஒரு மாஸ் நடிகரின் படம் வெளியாகும் போது பேனர்களுக்கு பாலபிஷேகம் செய்வது அல்லது கற்பூரம் ஏற்றுவது என்று தான் நாம் இதுவரை பார்த்துள்ளோம். ஆனால், சிம்பிவிற்காக அவரது ரசிகர் ஒருவர் தனது முதுகில் கிரானினின் கொக்கியை மாட்டியபடி அந்தரத்தில் தொங்கியுள்ளார்.

-விளம்பரம்-

கிரேனில் தொங்கியபடியே சிம்புவின் பேனருக்கு பாலபிஷேகம் செய்துள்ளார் அந்த ரசிகர், அப்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ஒன்று தற்போது சமூக வலைதள;வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ பதிவு.

Advertisement