சமீபத்தில் தான் வெங்கட் பிரபு இயக்க, சிம்புவை கதாநாயகனாக கொண்டு தொடங்கப்பட்ட” மாநாடு” படம் கைவிடப்பட்டது என்று அறிவித்திருந்தார்கள். மேலும், இந்த படத்திற்கு கூடிய விரைவில் நடிகரை தேர்ந்தெடுத்து படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார் தயாரிப்பாளர். இந்த படம் ஒரு அரசியல் கதையை மையமாக வைத்தும், திரில்லர் காட்சிகளை கொண்டதாகவும் இருக்கும் என தகவல்கள் தெரியவந்தன. மேலும், இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய ஃபேஸ்புக்கில் மாநாடு படம் சிம்பு உடன் கைவிடப்பட்டது என்றும் தெரிவித்து இருந்தார் . இதனைத் தொடர்ந்து சிம்பு ” மகா மாநாடு” என்ற படத்தை தந்தை டி. ராஜேந்திரன் அவர்கள் இயக்க எடுக்கப் போகிறோம் என்று அதிரடி அறிவிப்புகளை தெரிவித்திருந்தார்.

மேலும், இந்த படத்தை ஐந்து மொழிகளில் உருவாக்க போகிறார் என்றும் இந்த படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்க உள்ளது என்றும் தெரிவித்திருந்தார். இப்படி இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் சிம்பு மீண்டும் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் இணைகிறார் என்ற தகவல் வெளியானது. வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடிக்க இருந்த சிம்பு என்ன பிரச்சனையால் நடிக்க முடியாது என்று கூறினார் என்பது தெரியவில்லை. மேலும், சிம்பு அவர்கள் “மப்ஃடி , மகா” ஆகிய இரு படங்களில் கௌரவ வேடங்களில் நடித்து வருகிறார் என்றும், இந்த சமயத்தில் தான் மாநாடு படத்தின் பிரச்சனை எரிமலை போல் வெடித்தது. சமீபத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த ‘மாநாடு’பட பிரச்சனை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இதையும் பாருங்க : மீராவை கழுவி ஊற்றிய நபர் இப்போ ஜால்ரா போடுறாரு. ஜோ மைக்கேல் வெளியிட்ட ஆதாரம்.

Advertisement

மேலும், சிம்பு அவர்கள் மாநாடு படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்துள்ளார் என்றும் தெரியவந்தது. மேலும், இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது என்று கூறியிருந்த நிலையில் தற்போது சிம்பு அவர்கள் ஐய்யப்பன் கோவிலுக்கு மாலை போட உள்ளார் என்ற தகவல் தெரிந்தவுடன் அதிர்ச்சியில் உள்ளார்கள் மாநாடு படக்குழுவினர். சிம்பு அவர்கள் கடைசியாக நடித்த ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ என்ற படத்தை தொடர்ந்து தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரிக்க உள்ளார். மேலும், இந்த மாநாடு படம் தொடர்பான அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் சிம்புவின் கால்ஷீட் கிடைக்காததால் படப்பிடிப்புகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சிம்பு அவர்கள்: படத்திற்கான நேரத்தை ஒதுக்காமல் மற்ற வேலைகளில் பிஸியாக இருந்ததால் பெரிய பிரச்சினை ஏற்பட்டது. மேலும், சிம்புவிற்கும் படத்தின் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நீண்ட காலமாக மாநாடு படத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இந்த மாநாடு படத்தின் சர்ச்சைகள் கடந்த 15ஆம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முன்வைக்கப்பட்டது. தற்போது தான் சிம்பு அவர்கள் அம்மா இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டினார். மேலும், சிம்பு அவர்கள் மாநாடு படத்தில் நடிக்கிறேன் என்று கூறினார். அதற்கான ஒப்பந்தத்திலும் கடந்த வாரம் தான் கையெழுத்திட்டு உள்ளார் சிம்பு. இந்நிலையில் சிம்பு அக்டோபர் ஐந்தாம் தேதி ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும்,அவர் 40 நாட்கள் விரதமிருந்து கோவிலுக்கு செல்லவும் முடிவு செய்துள்ளார். கடைசியாக சிம்பு அவர்கள் 1992 ஆம் ஆண்டு’ எங்க வீட்டு வேலன்’ படத்துக்காக மாலை போட்டார். அதனை தொடர்ந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு விரதமிருந்து செல்ல உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. சிம்புவின் இந்த திடீர் முடிவு அவரது நண்பர்கள், குடும்பத்தினர், மாநாடு படக்குழு அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம். மேலும், அனைவரது மத்தியிலும் சிம்பு மாலை போடும் நிகழ்வினால் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

Advertisement
Advertisement