‘நான் டாக்டர் பட்டம் வாங்க இதுவே காரணம்’ – டாக்டர் பட்டடத்தை பெற்ற பின் பேசிய சிம்பு. வீடியோ இதோ.

0
516
Str
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருக்கிறார் சிம்பு. இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. நடுவில் சில படங்கள் தோல்வி அடைந்து இருந்தாலும் செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினர் சிம்பு. அதோடு சமீப காலமாகவே சிம்பு அவர்கள் தன்னுடயை படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வந்த மாநாடு படம் பல தடைகளை கடந்து வெளியாகி இருந்தது. இந்த படத்தை பிரபு காமாட்சி தயாரித்திருக்கிறார்.

-விளம்பரம்-
Image

மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். யுவன் படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். படத்தில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் சிம்புவும், தனுஷ்கோடி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யாவும் மிரட்டி இருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. மாநாடு படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.

- Advertisement -

சிம்புவுக்கு டாக்டர் பட்டம்:

இந்நிலையில் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிற தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிம்புவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக சில தினங்களுக்கு முன்பு வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்தது. அதன்படி இன்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் நடந்த விழாவில் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. டாக்டர் பட்டம் வழங்கிய பின் தந்தை டி ஆர் ராஜேந்திரன் மற்றும் தாயிடம் சிம்பு ஆசீர்வாதம் வாங்கி இருந்தார்.

Image

வைரலாகும் வீடியோ, புகைப்படம்:

அந்த புகைப்படங்களும், வீடியோவும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்து சிம்புவின் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் டாக்டர் பட்டம் பெற்ற பின் சிம்பு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, இந்த பட்டம் எனக்கு உரித்தானது அல்ல. எனது இந்த நிலைமைக்கு முழு காரணம் எனது தாயும், தந்தையும் தான். சினிமாவில் நான் இந்த அளவுக்கு உயர்ந்தது அவர்களால் தான்.

-விளம்பரம்-

சிம்பு அளித்த பேட்டி:

9 மாத குழந்தையிலிருந்து என்னை இந்த பயணத்தில் இணைத்துள்ளார்கள். எனவே இந்த பெருமைகள் அனைத்தும் அவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும். அவர்களை போன்ற பெற்றோர் எனக்கு அடுத்த ஜென்மத்தில் கிடைப்பார்களா? எனக்கு தெரியவில்லை. இறைவனுக்கு நன்றி சொல்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், இன்று முதல் சிம்பு ‘டாக்டர் சிம்பு’ என்று அழைக்கப்படுவார் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற வேல்ஸ் பல்கலைக்கழகம் நிறுவனர் ஐசரி கணேஷ் கூறியிருந்தார்.

சிம்பு நடிக்கும் படம்:

மாநாடு படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் வெந்து தணிந்தது காடு. இதில் ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், பாடலாசிரியர் தாமரை ஆகியோர் பணியாற்றி இருக்கிறார்கள். இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

Advertisement