‘வாழ்க்கைல வெய்ட்டு குறைக்கனும்னு மட்டும் நினைக்காதீங்க’ – Transformation வீடியோவை வெளியிட்ட சிம்பு.

0
626
simbu
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருக்கிறார் சிம்பு. இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகனாக வலம் வருகிறார். இருந்தாலும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல படங்கள் பெற்று உள்ளது. நடுவில் சிம்புவின் சில படங்கள் தோல்வி அடைந்து இருந்தாலும் செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினர். அதோடு சமீப காலமாகவே சிம்பு அவர்கள் தன்னுடயை படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வந்த மாநாடு படம் பல தடைகளை கடந்து வெளியாகி இருந்தது. மாநாடு படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இந்த படத்தை பிரபு காமாட்சி தயாரித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். யுவன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். படத்தில் சிம்பு வேற லெவல் மிரட்டி இருக்கிறார். அதோடு நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

- Advertisement -

சிம்பு குண்டாக இருந்த போது நிகழ்ந்தது:

இதனை தொடர்ந்து சமீபத்தில் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி இருந்தார்கள். அந்த புகைப்படங்களும், வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருந்தது. இது ஒரு பக்கமிருக்க, ஈஸ்வரன் படத்திற்கு முன்பு சிம்பு பயங்கர குண்டாக இருந்தார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இது குறித்து பலரும் பலவிதமாக விமர்சித்து இருந்தார்கள். ஏன் இப்படி ஆகி விட்டீர்கள்? என்ன பிரச்சனை? என்று எல்லாம் கேட்டு இருந்தார்கள். இதனாலே சிம்பு மன உளைச்சலில் இருந்தார். மேலும், அனைத்து விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் உடல் எடையை குறைத்தார்.

சிம்பு உடல் எடை குறைத்தல் வீடியோ:

அதற்குப் பின்னர் தான் இவர் ஈஸ்வரன் படத்தில் நடித்தார். இந்த நிலையில் இவர் உடல் எடை குறைத்தல் குறித்து ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் கேட்டிருந்தார்கள். தனது உடல் எடையை குறைத்த ட்ரான்ஸ்போர்மேஷன் வீடியோவை ரசிகர்கள் கேட்டதற்காக சிம்பு அவர்கள் தன்னுடைய பிறந்த நாள் அன்று யூடியூப் சேனலில் உடல் எடை குறித்த வீடியோவை வெளியிட்டுகிறார். அதில் அவர் 105 இடையில் இருந்து 71 கிலோவாக குறைந்து இருக்கிறது. அதற்காக அவர் உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி, விளையாட்டு என பல முயற்சிகளை கையாண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

ட்ரெண்டிங் ஆக்கும் ரசிகர்கள்:

சிம்பு உடல் எடையை குறைக்கும் போது பல கஷ்டங்களை தாங்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் மருத்துவரிடமும் சரியான முறையில் பரிசோதித்த பின் பல கஷ்டங்களை தாண்டி உடல் எடையை குறைத்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை ரசிகர்கள் லைக் செய்தும் ஷேர் செய்தும் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கியும் வருகிறார்கள். மேலும், மாநாடு படத்தைத் தொடர்ந்து தற்போது சிம்பு அவர்கள் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கௌதம் மேனன் இயக்கி வருகிறார்.

வெந்து தணிந்தது காடு படம்:

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களுக்கு பிறகு மீண்டும் சிம்பு – கவுதம் மேனன் கூட்டணி இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள். இது சிம்புவின் 47வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருக்கிறார். தாமரை பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் திருச்செந்தூரில் தொடங்கி மும்பையில் கடந்த மாதம் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. மேலும், இந்த படம் ஆக்ஷன் கிராமத்து பின்னணியில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

Advertisement