மூன்றாவது முறையாக காதலில் விழுந்தாரா சிம்பு – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ.

0
663
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. இவர் இயக்குனர், நடிகர் டி ராஜேந்திரன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

பின் இடையில் இவரின் படங்கள் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து கொண்டார். பின் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வர் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. பின்னர் பல போராட்டங்களுக்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு படம் கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது. பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் வெளியாகி இருந்தது.

- Advertisement -

பத்து தல:

இந்த படம் வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் பத்து தல. இந்த படத்தை இயக்குனர் ஒபேலி என் இந்த இயக்கி இருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் கன்னட மஃப்டி படத்தின் தமிழ் ரிமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

சிம்பு 48 படம்:

தற்போது சிம்பு தன்னுடைய நடிப்பில் தான் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது சிம்புவின் 48வது படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார். ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அதற்கான வேலைகளில் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் தீபிகா படுகோன், கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிம்பு தன் காதலியுடன் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

சிம்பு திருமணம்:

நடிகர், சிம்புவுக்கு தற்போது 40 வயதாகிறது. இருந்தாலும், இன்னும் அவருக்கு திருமணம் ஆகவில்லை. ஏற்கனவே நயன்தாரா, அன்சிகாவை சிம்பு காதலித்தது அனைவரும் அறிந்ததே. இவருக்கு இந்த காதல்கள் எதுவும் கை கூட வில்லை. அதோடு சிம்பு திருமணத்தை நினைத்து இவருடைய பெற்றோர்கள் கவலையில் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். நிறை இடங்களில் டி ராஜேந்திரன் பெண் பார்த்து இருக்கிறார். இருந்தாலும் எதுவும் செட்டாகவில்லை.

Simbu

சிம்பு காதலி

இந்த நிலையில் நடிகர் சிம்பு மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக கூறப்படுகிறது. வெளிநாட்டில் பொதுவெளியில் சிம்பு ஒரு பெண்ணுடன் உட்கார்ந்திருக்கிறார். அந்த புகைப்படம் தான் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலருமே, சிம்பு இவரை காதலிக்கிறாரா? இவரை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா? என்று ரசிகர்கள் எல்லாம் ஆவலுடன் கேட்டு வருகிறார்கள். அதோடு அடுத்த ஆண்டிற்குள் சிம்பு உடைய திருமண அறிவிப்பு வெளியாகும் என்றெல்லாம் கூறப்படுகிறது.

Advertisement