21 ஆண்டுக்கு முன் இதே நாளில் இருந்த தனது தங்கை மோனல் – சிறு வயதில் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து சிம்ரன் உருக்கம்.

0
757
Simran
- Advertisement -

தனது தங்கையின் நினைவு நாளில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார் சிம்ரன். தமிழ் சினிமாவின் எத்தனையோ சகோதரி நடிகைகள் இருந்து வருகின்றனர். ஊர்வசி – கல்பனா, ஷாலினி – ஷமீலி, நக்மா – ஜோதிகா என்று பல சகோதரி நடிகைகள் மிகவும் பிரபலம் தான். அந்த வகையில் சிம்ரன் – மோனல் சகோதரிகளும் ஒருவர். தமிழ் சினிமாவின் இடுப்பழகி என்ற பட்டத்துடன் 90ஸ் காலகட்டத்தில் முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களான விஜய், அஜித், விக்ரம், சூர்யா என்று பல்வேறு முன்னனி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்துவிட்டார் சிம்ரன்.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் கொடி கட்டி பறந்து வந்தார் சிம்ரன் என்றதும் நம் நினைவில் முதலில் வருவது அவரது நடனம் தான். இதனால் சிம்ரனை பலரும் இடுப்பழகி என்று அழைத்து வந்தனர். தமிழில் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன் நடித்த பல்வேறு படங்களுக்கு இவரது சிறப்பான நடிப்பில் இவருக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்தது. சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த வில்லி கதாபாத்திரம் என்று நடிகை சிம்ரன் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

- Advertisement -

சிம்ரன் குடும்பம் :

சிம்ரன் கடந்த 2003 ஆம் ஆண்டு சதீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் என்றும் கூறப்பட்டது. திருமணத்திற்கு பின்னர் இவருக்கு 2 ஆண் குழந்தைகளும் பிறந்தனர். திருமணம் முடிந்து குழந்தை குட்டி என்று செட்டில் ஆன பின்னரும் தனது நடிப்பை கைவிடாமல் இருந்து வந்தார். இவரது தங்கை மோனலும் ஒரு நடிகை தான்.

மோனலின் தற்கொலை :

கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான “பார்வை ஒன்றே போதுமே ” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து குணாலுடன் பல படங்களில் நடித்தார். சிம்ரனை போலவே இவருக்கு இளசுகள் மத்தியில் பல ரசிகர்கள் உருவாகினர். மேலும், விஜய்யின் பத்ரி திரைப்படத்தில் கூட நடித்து இருந்தார். இறுதியாக குணாலுடன் பேசாத கண்ணும் பேசுமே படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

சிம்ரனின் உருக்கமான பதிவு :

இந்த படம் வெளியான சில நாட்களிலேயே மோனல் அதாவது கடந்த 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இப்படி ஒரு நிலையில் தனது தங்கையின் 21 ஆம் ஆண்டு நினைவு நாளில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார் சிம்ரன். அதில், என் அழகிய தங்கை மோனலின் அழகிய நினைவுகள். எப்போதும் உன்னை மறக்கமாட்டேன்’ என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

மோனல் தற்கொலை குறித்து சிம்ரன் :

மோனல் இறப்பு தற்போது வரை மர்மமாகவே இருந்து வருகிறது. அதே போல மோனல் இறந்த சில மாதங்களில் மோனலின் தற்கொலை பின்னணியில் அவர் கலா மாஸ்டரின் தம்பி பிரசன்னா என்பவரை காதலித்து வந்த்தாகவும் ஆனால், கலா மாஸ்டர் வீட்டில் ஒப்புக்கொள்ளாததால்பிரசன்னா பிரசன்னா, மோனல் உடனான காதலை முறித்தக் கொண்ட இரண்டு நாட்களில் மோனல் தற்கொலை செய்து கொண்டார் என்று நடிகை சிம்ரன் கூறியிருந்தார்.

Advertisement